டிஜேவை கரம்பிடித்த விஜே.. பிரியங்காவுவின் கணவர் இவர் தானா? - இவ்வளவு வயசு வித்தியாசமா?

by Giri |   ( Updated:2025-04-16 23:59:37  )
டிஜேவை கரம்பிடித்த விஜே.. பிரியங்காவுவின் கணவர் இவர் தானா? - இவ்வளவு வயசு வித்தியாசமா?
X

Priyanka Deshpande

பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் குறித்தும், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கிரிஸ்பி கேர்ள்ஸ் ‘ என்கிற நிகழ்ச்சி, அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இதை தொடர்ந்து, சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் சில ரவுண்டு வந்தவர், விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியபோது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் தொட்டது எல்லாம் பொன்னானது போல் அவர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட் அடித்தது. திரை வாழ்க்கையில் மின்னினாலும் நிஜ வாழ்க்கையில் தோற்றுப்போனார்.

காதலித்து திருமணம் செய்த கணவரை விவாகரத்து செய்தார் பிரியங்கா. இதையடுத்தே நேற்று இரண்டாவது திருமணம் செய்தார். அவரின் புதிய கணவர் யார்.. பார்க்க வயதானவர் போல் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், பிரியங்காவின் கணவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் டிஜே வசி.

யார் இவர்?

பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்த டிஜே வசி யார் என்பது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வசி தொழில்முறை டிஜேவாக பணியாற்றி வருகிறார். பல கார்பரேட் நிகழ்ச்சிகளிலும் பப்புகளிலும் டிஜேவாக பணியாற்றிய இவர், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியையும் நடத்தி வருகிறார். அப்படியாக ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கும் டிஜே வசிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட, பின்னர் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

வயது வித்தியாசம்?

பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் வசி, நரைத்த முடியுடன் வயதானவர் போல தோற்றமளித்ததால், அவரின் வயது பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். டிஜே வசிக்கு தற்போது 42 வயது ஆகிறதாம். ஆனால், பிரியங்காவுக்கு வயது 32. ஆம், அவரை விட 10 வயது இளையவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தன்னைவிட 10 வயது மூத்தவரை பிரியங்கா திருமணம் செய்துகொண்ட செய்தி தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story