சுசித்ரா வீட்டிலேயே கை வைத்த பிரியங்கா.. முதல் திருமணம் பறிபோக இதுதான் காரணமா? - பகீர் தகவல்!

by Giri |   ( Updated:2025-04-16 09:18:58  )
சுசித்ரா வீட்டிலேயே கை வைத்த பிரியங்கா.. முதல் திருமணம் பறிபோக இதுதான் காரணமா? - பகீர் தகவல்!
X

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இன்று இரண்டாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் உலா வரும் நிலையில், திருமண வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிரிஸ்பி கேர்ள்ஸ் ' என்கிற நிகழ்ச்சி, அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இதை தொடர்ந்து, சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் சில ரவுண்டு வந்தவர், விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியபோது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் தொட்டது எல்லாம் பொன்னானது போல் அவர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட் அடித்தது.

திரை வாழ்க்கையில் மின்னினாலும் நிஜ வாழ்க்கையில் தோற்றுப்போனார். காதலித்து திருமணம் செய்த கணவரை விவாகரத்து செய்தார் பிரியங்கா. இன்று அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில், அவரின் முதல் திருமணம் ஏன் விவாகரத்து ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலாக பயில்வான் ரங்கநாதன் முன்பு கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், பயில்வான் ரங்கநாதன், "பிரியங்கா பிரபல பாடகி சுசித்ராவின் தம்பியின் மனைவி. பிரியங்காவை கல்யாணம் பண்ணும் போதே அவள் வேண்டாம் என சுசித்ரா தம்பியிடம் கூறியிருக்கிறாராம். ஆனால் அப்போது தம்பி கேட்கவில்லை. இதனால் அவர்கள் பிரிந்த பின் சுசித்ரா தனது தம்பியின் வாழ்க்கையை கெடுத்தது பிரியங்கா தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரியங்கா ஆங்கராக இருக்கும்போது அவரின் கணவர் ப்ரொடியூசராக இருந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

இதையடுத்து தனது சொந்த குடும்பத்திலேயே கைவைத்த பிரியங்காவை சுசித்ரா திட்டிவருகிறார். பிரியங்கா ஒரு ஆள் மயக்கி, சிரிச்சு சிரிச்சு பேசியே ஒருவரின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களை அடிமைப்படுத்திவிடுவார். ஒருவன் காதலிக்கும் போது, எல்லாவற்றையும் விழுந்து விழுந்து செய்வான். காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்வது இயல்பு. ஆனால் இதையே ஒரு காரணமாக கொண்டு, திருமணத்திற்கு பின் சுசித்ரா தம்பியை பிரியங்கா அடிமைப்படுத்த நினைத்தாராம்.

அவரை அடிமைப்படுத்த நினைக்கும் போது தான் பிரியங்காவின் கணவர் திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்தார் என்று சுசித்ரா சொல்றாங்க. பொதுவாக சுசித்ரா எல்லா விஷயங்களிலும் முந்திக்கொண்டு பேசுவது வாடிக்கை. ஆனால் இது அவருடைய தம்பியின் வாழ்க்கை விஷயங்கள் சம்பந்தப்பட்டது.

எனவே சுசித்ரா பேசும் இந்த விஷயம் குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. அதேபோல் பிரியங்கா கணவரை தன்னுடைய சொந்த தம்பி என அந்த பதிவில் சுசித்ரா கூறவில்லை. தன்னுடைய தம்பி என்று ஏதோ ஒரு முறையில் வரும் சொந்தம் என்று கூறியிருக்கிறார்." என்று பயில்வான் ரங்கநாதன் பேசிய பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

Next Story