தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் அவரது 20 நிமிஷ ஃபூட்டேஜ் காணோம் என கிணத்த காணோம் ரேஞ்சுக்கு படக்குழுவினர் அழுது புலம்பி பிரஸ்மீட் வைத்துள்ளனர். அவர்கள் மறைமுகமாக இதற்கு காரணமே பிரியங்கா மோகன் தான் என சொல்லாமல் சொல்லியிருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இனிமே டிக்டாக் எல்லாம் பேனும்மா என சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனுக்கு ஏன் அப்படியொரு பாட்டு அனிருத் போட்டார் என அப்போ புரியல, இப்போ தான் புரியுது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எதே 8822 வயசா!.. ஓஹோ.. பைத்தியமா இவன்.. பிரேமம் ஹீரோவை இப்படி பிணாத்த விட்டுட்டாரே ராம்!
பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் பிட்டு சீன்கள் அடங்கிய டிக் டாக் படத்தின் டிரெய்லர் வெளியானது. எம்.கே. என்பவர் தயாரித்து இயக்கிய இந்த படம் கடந்த வாரம் ஆண்டு இறுதியில் வெளியானது.
ஆனால், தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநருக்கும், ஹீரோ உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல படத்துல ஒரு 20 நிமிஷம் போர்ஷனே காணோம் என தெரிய வந்து அதிர்ச்சியாகி உள்ளனர். அதிலும், குறிப்பாக அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகனின் காட்சிகள் தான் மிஸ்ஸிங்காம்.
இதையும் படிங்க: கேப்டன் மறைவிற்கு வந்திருந்தா உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்குமா? வடிவேலு பற்றி முத்துக்காளையின் பதில்
2018ல் பிரியங்கா மோகன் நடிப்பில் முதன் முறையாக உருவான படமே இதுதான் என்றும் மினி பட்ஜெட் படம் என்பதால் பல ஆண்டுகள் கழித்து இப்போதான் வெளியாகி இருக்கிறது. டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், அடுத்து வெளியாகப் போகும் கேப்டன் மில்லர் என பிரியங்கா மோகன் ரேஞ்சே மாறிய நிலையில், டிக்டாக் படத்தின் காட்சிகள் அவரது மார்க்கெட்டை காலி செய்து விடும் என நினைத்து இப்படியொரு வேலையை பார்த்துள்ளாரா? என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…