என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரியங்கா மோகன்!..
கர்நாடகா சொந்த மாநிலம் என்பதால் கன்னட படத்தில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு நடிகர் நானியுடன் ஜோடி போட்டு கேங்லீடர் என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.
அப்போதுதான் தமிழ் பட இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்திற்கு கதாநாயகியை தேடி வந்தார். அவரின் கண்ணில் பிரியங்கா மோகன் படவே டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். சிவகார்த்திகேயனுக்கு சரியான ஜோடியாக இருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.100 கோடி வசூல் செய்தது.
அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் பிரியங்கா நடித்தார். மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார். அதோடு, தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தார். இப்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் கவர்ச்சியை நம்பாமல் நடித்து வருகிறார்.
மேலும், ராஜேஷ் இயக்கி வரும் பிரதர் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக அழகான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக டீசண்டாக உடையணிந்து போஸ் கொடுக்கும் பிரியங்கா திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.