அப்படி மட்டும் பாக்காத.. கூடவே வந்திடுவோம்!.. பிரியங்கா மோகனின் க்யூட் கிளிக்ஸ்..
கன்னடத்தில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். அதன்பின் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். நானியுடன் இவர் நடித்த கேங்லீடர் திரைப்படம் வரவேற்பை பெற்றதோடு, அவருக்கு ரசிகர்களையும் உருவாக்கியது.
நெல்சன் கண்ணில் இவர் படவே, சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் பிரியங்கா மோகன் இடம் பிடித்தார்.
அதன்பின் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ’டான்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா மோகன் வளரும் இளம் நடிகையாக உருவாகியுள்ளார்.
அவ்வப்போது பிரியங்கா மோகன் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.