ஏம்மா நீயுமா இப்படி?!.. தொப்புளை காட்டி போஸ் கொடுத்த டாக்டர் பட நடிகை...
டாக்டர் படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகன். அம்மணியின் சொந்த தேசம் ஆந்திரா என்றாலும் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தார். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். அதன் விளைவாக ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஃபிட்டான உடையில் க்யூட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.
இந்நிலையில், பாவாடை தாவணியில் தொப்புளை காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது அவர் நடித்த தெலுங்கு படம் ஒன்றின் இடம் பெற்ற பாடல் காட்சி என கருதப்படுகிறது.