கொஞ்ச தூண்டும் கொள்ளை அழகு!! டாக்டர் நாயகியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்:
தமிழ் திரைப்பட உலகிற்கு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மூலம் நன்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன், சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணான இவர் ஹோம்லி அழகில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
நடிகை பிரியங்கா மோகன் முதல் முதலில் கன்னட சினிமா உலகான சண்டல்வுட் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். பின்னர் தெலுங்கு நடிகர் நாணி உடன் சேர்த்து நடித்த கேங் லீடர் திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றதால் உற்சாகம் அடைந்த பின்னர் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டார்.
சமீபத்தில் நடிகர் சிவார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த டாக்டர் திரைப்படம் பெற்ற வெற்றியை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கொண்டார். மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான "டான்" மற்றும் நடிகர் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" ஆகிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினமாவிற்கு ஜெனிலியா, நஸ்ரியா வரிசையில் மற்றும் இரு கியூட் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடுகிறார்கள். இவர் சமீப்தில் வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள்களின் மொபைல் ஸ்கிரீன் சேவர் ஆக உள்ளது.