இவ்ளோ அழகா இருந்தா நாங்க காலி!.. வேறவெவல் லுக்கில் ஃபிளாட் ஆக்கிய பிரியங்கா மோகன்..

Published On: March 22, 2024
| Posted By : சிவா
priyanka

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். பள்ளி, கல்லூரி எல்லாவற்றையும் அங்குதான் படித்தார். அதன்பின் அவரின் குடும்பம் சென்னையில் செட்டில் ஆனது. அவர் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு நானி ஹீரோவாக நடித்த கேங்லீடர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர் வாய்ப்புகள் வந்தது. சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்தார்.

priyanka

அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார். இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தை சிவா மனசுல சக்தி பட இயக்குனர் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

priyanka

சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என நினைப்பவர் இவர். அதனால்தான் டீசன்ட்டான உடைகளை மட்டுமே அணிந்து நடித்து வருகிறார். குறைவான படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பவர் இவர்.

priyanka

ஒருபக்கம், அழகான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வருகிறது.

priyanka