கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதன்பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.

Also Read
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் அம்மணிதான் கதாநாயகி.

இப்படம் வருகிற 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், க்யூட்டாக போஸ் சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு. அவரின் சமீபத்திய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..




