போதும் செல்லம்.. இதுக்கு மேல முடியாது!.. வேறலெவல் க்யூட்னஸில் சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்...
Priyanka mohan: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகனன். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன் கன்னட படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவுக்கு போனார். அங்கு சில படங்களில் நடித்த பின்னர்தான் தமிழில் டாக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்தியனுடன் மீண்டும் டான் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
தனுஷின் நடிப்பில் வெளிவந்து ஆக்ஷன் பட விரும்பிகளிடம் வரவேற்பை பெற்ற கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடும் பெண் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது 2 தெலுங்கு படங்களிலும் பிரதர் எனும் தமிழ படத்திலும் நடித்து வருகிறார்.
மிகவும் க்யூட்டாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது அழகழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்து பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.