ஓரக்கண்ணால பாத்தே உசுரு போகுதே!.. இளசுகளை காலி செய்த பிரியங்கா மோகன்!..
பெங்களூரில் பிறந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பிரியங்கா மோகன். முதலில் ஒரு கன்னட படத்தில் நடித்தார். அதில் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்கள் நடித்தார்.
அதில் ஒரு படம் ஹிட் அடித்தது. அப்போது தமிழில் இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்திற்கு ஒரு புதிய முகத்தை தேடி வந்தார். அப்போது பிரியங்கா மோகன் புகைப்படம் கண்ணில் படவே அவரை அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
நெல்சன் கொடுத்த அந்த வேடத்தை கனக்கச்சிதமாக செய்து காட்டினார் பிரியங்கா. டாக்டர் படமும் ஹிட் அடிக்கவே அப்படியே சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் டான் படம் பெரிய ஹிட்
அடித்தது.
அதன்பின் தனுஷுன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இப்போது 2 தெலுங்கு படங்களிலும் பிரியங்கா நடித்து வருகிறார். அதோடு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் படத்திலும் நடித்து வருகிறார்.
அதோடு, எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக கொஞ்சம் கவர்ச்சியான உடைகளையும் அணிந்து அழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சை செய்து வருகிறார்.