மொத்த அழகும் அதுலதான் இருக்கு!...ரசிகர்களை மயக்கிய பிரியங்கா மோகன்....

ஆந்திராவை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அட அழகாக இருக்கிறாரே என வியந்த சிவகார்த்திகேயன் இவரை தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். படமோ சூப்பர் ஹிட். மேலும், பிரியங்காவின் நடிப்பும் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.
டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது.
டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, தனது டான் படத்திலும் இவரையே தனக்கு ஜோடி ஆக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். எனவே, பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்லி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘மொத்த அழகும் உன் சிரிப்புலதான் இருக்கு’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.