தயவு செய்து அந்த படத்தை வெளியிடாதீங்க- தயாரிப்பாளரிடம் கெஞ்சும் டாக்டர் பட ஹீரோயின்
கொரோனா லாக்டவுணுக்கு பின் கடந்த சனிக்கிழமை அன்று வெளியான படம் டாக்டர். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தற்போது விஜயை இயக்கி வரும் நெல்சன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். இவரது ஹோம்லியான் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது பிரியங்கா மோகன் மீண்டும் சிவாவுடன் டான், சூர்யாவுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்க்ளின் படங்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா மோகனுக்கு டாக்டர் முதல் படம் என்று கூறினாலும் அதற்கு முன்பே டிக்டாக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரியங்கா மோகனுக்கு தற்போது டிக்டாக் பெரிய தலைவலியை கொடுத்துள்ளதாம். காரணம் முதல் படம் என்பதால் கவர்ச்சியை தாராளமாக காட்டியுள்ளாராம். எனவே இந்த படம் தற்போது வெளிவந்தால் தனது இமேஜை டோட்டலாக காலி செய்துவிடும் என்று அஞ்சுகிறாராம். எனவே டிக்டாக் தயாரிப்பாளரிடம் இந்த படத்தினை தயவ்சு செய்து வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.
ஆனால் தற்போது பிரியங்கா மோகனுக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளாதால் டிக்டாக் படத்தை வெளியிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அதன் தயாரிப்பாளர் கணக்கு போடுகிறாராம். என்ன நடக்கபோகிறதோ தெரியவில்லை. ஆனால் படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.