வைரலாகும் பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள்.. என்ன மாதிரி போஸ்

by Rohini |   ( Updated:2025-04-16 09:01:19  )
priya
X

priya

Priyanka Deshpande: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஆங்கராக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக எந்த மூலைக்கும் செல்லக் கூடியவர். சக ஆங்கரான ம.க.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியானாலும் அந்த நிகழ்ச்சியில் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.

பிரியங்காவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. விஜய் டிவி டெக்னீசியனாக வேலை பார்த்த பிரவீன் என்பவரைத்தான் இவர் திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால் இதுவரை பிரியங்காவுக்கும் பிரவீனுக்கும் என்னதான் நடந்தது என யாருக்குமே தெரியாது. ஏன் இருவருக்கும் விவாகரத்து ஆனதா என்பது கூட தெரியாது.

இந்த நிலையில் இன்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. நெருக்கமான நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் இருக்கின்றனர். இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை யார் என்ன செய்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

ஆனால் முதல் திருமணம் சரிவர போகாததற்கு பிரியங்காவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அப்போது பல சர்ச்சைகள் எழுந்தன. ஏனெனில் இவர் கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டக் கூடியவர் என்றெல்லாம் கூறி வந்தார்கள். ஆனால் பிரியங்கா அது எதை பற்றியும் காதில் வாங்க வில்லை. எப்போதும் போல் தன் கெரியரில் கவனம் செலுத்தி வந்தார். தன் தம்பி மீது மிகுந்த பாசம் கொண்டவர் பிரியங்கா.

இவர் இந்த துறைக்கு வந்த 20 வருடம் ஆகின்றது. இதுவரை ஒரு லட்சிய தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார். இவரை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். ஏன் ஆங்கர் துறை ஒரு லேடி சூப்பர் ஸ்டார் பிரியங்கா என்றே சொல்லலாம். இவருடைய இந்த இரண்டாவது திருமணமாவது நீடித்து நிலைக்க வேண்டும்.

Next Story