சத்யராஜுக்கும் ரஜினிக்கும் இடையே இதுதான் நடந்தது..! வதந்திகளை உடைத்த சிபிராஜ்..!

Published on: June 21, 2022
sathya_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிபிராஜ். ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் நட்சத்திர அந்தஸ்தை பெற முடியவில்லை. எனினும் இன்னும் அந்த இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டு வருகிறார். இவரின் நடிப்பில் தயாராகி வரும் மாயோன் படம் ஜுன் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

sathya1_cine

இந்த படத்தின் புரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ஏற்கெனவே வைரலான ரஜினி சத்யராஜ் பிரச்சினையை பற்றி இவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த சிபிராஜ் அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் அப்பாவை வில்லனாக நடிக்க அணுகினார்கள்.

sathya2_cien

அந்த நேரத்தில் அப்பா சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததனால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் கூறினார். இந்த செய்தியை ஊடகம் பெருசாக்கி பல வதந்திகளை பரப்பியதாகவும் கூறினார்.

sathya3_cine

மேலும் ரஜினி படத்தின் டைட்டிலான ரங்காவை என் படத்தில் வைத்ததால் ரஜினி கோபப்பட்டதாகவும் தவறான தகவல்கள் பரவி பெரிய செய்தியாக மாறிவிட்டது என கூறினார்.