Connect with us
MGR

Cinema History

எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்… பயந்து நடுங்கிய திரையுலகம்… நடந்தது இதுதான்..!

பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் அன்பே வா படத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

நவம்பர், டிசம்பர்ல ஊட்டில எப்பவுமே கிளைமேட் கிளியரா இருக்கும். அது தான் சூட்டிங் எடுக்க உகந்த மாதம். அப்போ அன்பே வா படப்பிடிப்பு நடக்குது. முதல் ஷாட் எம்ஜிஆருக்கு. அவரு வர கொஞ்சம் லேட்டானதால அந்த கேப்ல சரோஜாதேவிக்கு ஒரு க்ளோசப் ஷாட் எடுத்துடலாம்னு நினைச்சோம். அப்போ கேமரா எல்லாம் ரெடி. ஷாட் எடுத்துக்கிட்டு இருக்கோம்.

எம்ஜிஆர் கார்ல வந்து இறங்குறாரு. சூட்டிங் நடக்குறத பார்த்ததும் கார்ல போய் உட்கார்ந்துக்கிட்டாரு. அசிஸ்டணட் போய் அவரைக்கூப்பிடுறான. டைரக்டரை வரச்சொல்லுன்னு சொல்றாரு. எனக்கு பர்ஸ்ட் ஷாட்டுன்னு சொல்லிட்டு அந்த அம்மாவை வச்சி எடுக்கிறீங்களான்னு கேட்டார்.

Anbe vaa

Anbe vaa

அன்னைக்குத் தான் அவர் கோபத்தைக் காட்டுனாரு. ஆனா அதோட அதை மறந்துட்டாரு. இன்னொரு தடவை அப்செட்டானாரு. பெரிய ஒரு ஹால். செட் போட்டு நாடோடி போக வேண்டும் ஓடோடின்னு பாட்டு. டான்ஸ் ரிகர்சல் நடக்குது. எம்ஜிஆர் மேக்கப் போட்டுட்டு வர்றாரு. புலி மாதிரி எல்லாம் வேஷம் போட்டு ஆடிக்கிட்டு இருக்காங்க.

வந்தாரு. பத்து நிமிஷம் உட்கார்ந்து பார்த்துட்டு நேரா ரூமுக்குப் போயிட்டாரு. அப்புறம் எம்ஜிஆரோட அசிஸ்டண்ட் வந்து மேனேஜர்கிட்ட காதுல என்னமோ சொல்றான். மேனேஜர் கார்ல ஏறி வெளியே போயிட்டாரு. அப்புறம் எம்எஸ்வி.யை அழைத்து வந்தார். அப்புறம் ஆரூர் தாஸ்,

வாலி என எல்லாரும் வந்துட்டாங்க. எல்லாரும் ரூமுக்குள்ள ஓடிப்போனாங்க. அப்புறம் கொஞ்சநேரம் போனதும் 3 பேரும் சிரிச்சிக்கிட்டே வர்றாங்க. எம்ஜிஆரும் கூடவே வர்றாரு. அப்புறம் செட்டுக்குப் போய் ஆடுறாரு. என்ன நடந்ததுன்னு தெரியல. அப்புறம் ஆரூர்தாஸ் தான் சொன்னாரு. ஒண்ணும் இல்ல.

இதையும் படிங்க… நாகேஷ் சொன்ன ஒரு வார்த்தை! அதோட அர்த்தம் புரிய 6 வருஷம் ஆச்சு.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

இந்த ‘நாடோடி போக வேண்டும் ஓடோடி’ங்கற வார்த்தை அவருக்குப் பிடிக்கல. அதை நாங்க விளக்கம் சொல்லி புரிய வச்சோம். இதை பொலிடிகலா பார்க்காம பாட்டோட சிச்சுவேஷனா பார்த்தா புரியும்னு சொல்ல அப்புறம் தான் சம்மதிச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top