Vijay: பன்னீரில் குளிக்கிறவருக்கு சாக்கடைனா என்னனு தெரியனும்..விஜயை விமர்சித்த தயாரிப்பாளர்

Published on: December 4, 2024
vijay
---Advertisement---

Vijay: ஃபெங்கால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து நிவாரண பொருட்களை விஜய்  நேற்று வழங்கியது பெரும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. ஏனெனில் இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் இருக்கும் இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியது இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

ஆனால் விஜய் இப்படி செய்தது தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எம்ஜிஆர் முதல் விஜயகாந்த் வரை அனைவருமே நிவாரண பொருட்களை வழங்குவதற்காகவும் ஏழை எளிய மக்களை சந்திப்பதற்காகவும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

ஆனால் விஜய் இப்படி செய்தது எந்த விதத்தில் நியாயம் என்ற வகையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் கேள்வி கேட்டபோது அதற்கு அவருடைய கருத்துக்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். இதோ அவர் கூறியது. விஜய்க்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அரசியலுக்கு வருவது என்பது மக்கள் சேவை.

இதையும் படிங்க: திரிஷா என் தோழிலாம் இல்லை… பேட்டியில் அடாவடியாக பேசிய நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

அதை தவிர்த்து அரசியலில் பணம் சம்பாதிப்பது அரசியல் அதிகாரம் இதெல்லாம் வேற .மக்கள் சேவை என்பதுதான் அரசியலே. இந்த நாட்டை ஆளப்போகிறவர், முதலமைச்சராக வரவேண்டும் என எண்ணுபவர். இப்படி இருக்கும்போது மக்களோடு மக்களாக இறங்கி அரசியல் செய்ய வேண்டும். உதாரணமாக விஜய் ஒரு மேடைக்கு போகிறார் என்றால் அவருடன் பவுன்சர்களும் சேர்ந்து செல்கிறார்கள்.

இவர்கள் இருக்கும் பொழுது எப்படி மக்கள் இவரை நெருங்க முடியும். மக்களுடன் சகஜமாக எப்படி விஜய்யால் உரையாட முடியும். எம்ஜிஆர் விஜயகாந்த் இவர்களெல்லாம் அப்படியா இருந்தார்கள். ஒரு கூட்டத்தில் நுழைந்துவிட்டால் அத்தனை பேரும் எம்ஜிஆர், விஜயகாந்த் இவர்களை கையைப் பிடித்து அன்பை பரிமாறிய புகைப்படங்களை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

balaji prabhu
balaji prabhu

ஆனால் பவுன்சர்களை வைத்துக்கொண்டு எப்படி மக்களோடு மக்களாக இவரால் அரசியல் செய்ய முடியும். சரி இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு முதிர்ச்சி குறைவாக இருக்கலாம். அறிவு குறைவாக இருக்கலாம். ஆனால் நிவாரணத்தைப் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த பொருள்களை வழங்க வேண்டும்.

அங்கு எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நேரில் போய் பார்க்க வேண்டும் .அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு 300 அல்லது 250 பேரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரே வேன் வைத்து அழைத்து வந்து நிவாரப் பொருள்களை கொடுக்கிறார் . பாதுகாப்பு கொடுக்கிறார். வந்த அனைவருக்கும் சாப்பாடும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டதுக்கு காரணம்… மூடிமறைத்தது ஏன்? பேரன் சொன்ன அதிர்ச்சி தகவல்

இதெல்லாம் சரி. ஆனால் களத்திற்குள் குதிக்க வேண்டும். துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் இரவு பகல் பார்க்காமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நேரில் போய் ஆய்வு செய்கிறார். பன்னீரில் குளிக்கிறவருக்கு சாக்கடை என்றால் என்னனு தெரியவா போகுது என பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.