தனுஷ் பண்ணது தப்புன்னா உங்க புருஷன் பண்ணது?!... நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்..

by ramya suresh |   ( Updated:2024-11-16 09:44:00  )
தனுஷ் பண்ணது தப்புன்னா உங்க புருஷன் பண்ணது?!... நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்..
X

#image_title

நடிகர் தனுஷ் செய்தது தவறு என்றால் உங்கள் கணவர் செய்தது நியாயமா என்று கேட்டு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டுருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை தான். நேற்று வரை கங்குவா திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அதற்கு சற்று ஓய்வு கொடுத்திருக்கின்றார் நடிகை நயன்தாரா.

இதையும் படிங்க: கங்குவா படம் பார்த்தவர்களுக்கு நிவாரண தொகை… இத யாருமே கவனிக்காம விட்டீங்களே!…

நடிகை நயன்தாரா தனது டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடலை பயன்படுத்துவதற்கு நடிகர் தனுஷ் என்ஓசி கொடுக்கவில்லை என்று ஆதங்கத்தில் மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார் நடிகை நயன்தாரா. வெறும் மூன்று நொடிக்கு நடிகர் தனுஷ் 10 கோடி கேட்பதாக அந்த அறிக்கையில் பேசி இருந்தார். நடிகை நயன்தாராவின் கருத்துக்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக இயக்குனர் எஸ்எஸ் குமரன் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: " திருமதி நயன்தாரா அவர்களே.. மூன்று வினாடி காட்சிக்கு நஷ்ட ஈடு கேட்டு திரு தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததாய் வெகுண்டு எழுந்த நீங்கள் கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் திரு விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

என் கதைக்கும் அந்த தலைப்புக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் அந்த தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கின்றது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு திரு விக்னேஷ் சிவன் அவர்கள் வைத்திருக்கிறார் என்றால் 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணம்.

அதற்கு எந்த கடவுள் மன்றத்தில் பதில் சொல்லப் போகிறீர்கள். உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள் எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எந்த அதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறீர்கள். கடவுள் நிச்சயம் உங்களுக்கு பதில் கொடுப்பார்.

இப்பொழுது வரை அந்த தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கின்றது. எந்த படைப்பாளியும் தன் படைப்பை பல காரணங்களோடும் பல பொருள் செலவோடும் தான் கட்டமைக்கின்றார். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதை பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: கர்ச்சீப் வச்சி மறச்சிட்டியே!.. கடற்கரையில் கிளுகிளுப்பு காட்டும் கங்குவா ஹீரோயின்!..

நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்திற்கு மிகவும் மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க' என்ற ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கின்றார்.

Next Story