எவ்ளோ பெரிய ஹீரோனாலும் இந்த நடிகையின் ஷாட்தான் ஃபர்ஸ்ட்.. அந்தளவுக்கு ராசியான நடிகை யார் தெரியுமா?

Published on: February 27, 2024
sri
---Advertisement---

Actress Sripriya: தமிழ் சினிமாவில் பானுமதிக்கு பிறகு நடிப்பில் துணிச்சலை காட்டிய நடிகையாக ஸ்ரீபிரியாவை கூறலாம். ஸ்ரீபிரியாவை பார்க்கும் போதெல்லாம் பானுமதியை கண்முன் கொண்டு வருவார். அதே வெடுக்கத்தனமான பேச்சு, துணிச்சலான நடிப்பு என ஒரு தைரியமிக்க நடிகையாகவே வலம் வந்தார் ஸ்ரீபிரியா.

ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகுமார் என பல முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீபிரியா ரஜினியுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி ரஜினி ஜோடியை ரசித்ததை விட ரஜினி ஸ்ரீபிரியா ஜோடியைத்தான் அதிகமாக ரசிகர்கள் விரும்பினார்கள்.

இதையும் படிங்க: கவுண்டமணி காமெடியில் கலக்கிய காமெடி நடிகர்!… கடைசிக்கட்ட வாழ்க்கையில் இவ்ளோ சோகமா?!..

அதுமட்டுமில்லாமல் சிவக்குமாரும் ஸ்ரீபிரியாவும் சேர்ந்து கிட்டத்தட்ட 15 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்களாம். இந்த நிலையில் ஸ்ரீபிரியா ஒரு பேட்டியில் அவருடைய அனுபவங்களை கூறும் போது சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறினார். இவருடன்தான் நடிப்பேன், அவருடன் நடிக்க மாட்டேன் என எந்த நேரத்திலேயும் ஸ்ரீபிரியா சொன்னதே இல்லையாம்.

கதைக்கு முக்கியத்துவம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். அதுமட்டுமில்லாமல் பைரவி படத்தில் நடிக்கும் போது ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படம் அது. அதற்கு முன்பே ‘ஆட்டுக்கார அலமேலு’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தை சின்னப்பத்தேவர்தான் தயாரித்தார்.

sripriya
sripriya

இதையும் படிங்க: தக் லைஃபில் நான் கேமியோ ரோல் தான்… உண்மையை உடைத்த ஜெயம் ரவி… ஆனா அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஆட்டுக்கார அலமேலு படத்தில் இருந்தே தேவருக்கு என் மீது ஒரு தனி பிரியம். அதாவது ராசியான நடிகை என்று முத்திரைக் குத்திவிட்டார். அதிலிருந்தே அவருடைய படங்களில் யார் ஹீரோவாக நடித்தாலும் நான் நடிக்கிற படம் என்றால் என்னை வைத்துதான் முதல் ஷாட் எடுக்க வேண்டும் என தேவர் சொல்லுவார் என ஸ்ரீபிரியா கூறினார்.