ஹீரோக்களை திருப்திப்படுத்த தயாரிப்பாளர்கள் இந்த மாதிரிலாம் பண்றாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
சமீப காலமாக பல நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே வசூல் போட்டி ஒன்று நிலவி வருகிறது. எந்தெந்த நடிகர்களின் திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றன போன்ற தகவல்களை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு கண்காணிக்கின்றனர்.
ரசிகர்களின் இந்த ஆவல் போட்டி நடிகர்களுக்கிடையே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். ஆதலால் தயாரிப்பாளர்கள் நடிகரை திருப்திப்படுத்துவதற்காக அந்த நடிகரின் திரைப்படம் அதிகமாக வசூல் ஆகியுள்ளதாக சில பொய்யான வசூல் கணக்குகளை வெளியிடுகிறார்கள் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “இவ்வாறு ஒரு நடிகரை திருப்திப்படுத்துவதற்காக அந்த நடிகரின் படம் அதிகமாக வசூல் ஆகியுள்ளதாக கூறுவதால், அந்த நடிகர் தனது அடுத்த திரைப்படத்தில் தனது சம்பளத்தை கூட்டிவிடுகிறார்” எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் “வாரிசு படம் 200 கோடி வசூலை தாண்டிவிட்டது என்று தயாரிப்பாளர் கூறிய தகவலை தொடர்ந்து திருப்பூர் சுப்ரமணியம், 7 நாட்களுக்குள்ளே 200 கோடி வசூல் ஆவதற்கான வாய்ப்பே இல்லை. 140 கோடியில் இருந்து 160 கோடிகளுக்குள்தான் வசூல் ஆனதாக அவ்வளவு உறுதியாக சொல்கிறாரே. ஏன் தயாரிப்பாளர்கள் இவ்வளவு அதிகமாக கூறுகிறார்கள். ரசிகர்கள் இந்த வசூலை தெரிந்துகொண்டு என்ன பண்ணப்போகிறார்கள்”? என ஒரு நேயர் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அந்த கேள்விக்கு பதிலளித்திருந்த சித்ரா லட்சுமணன்,
“பெரும்பாலும் திரைப்படத்தின் வசூலை பற்றி தயாரிப்பாளர்கள் தவறான தகவல்களை தருகிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் ஹீரோக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் மல்டி ஸ்டார்களை கொண்ட படம்… பொன்னியின் செல்வனுக்குலாம் முன்னோடி இதுதான் போல…
இது போன்ற தவறான தகவல்களை தொடர்ந்து தராதீர்கள் என்று பல ஆண்டுகளாக திருப்பூர் சுப்ரமணியம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் தயாரிப்பாளர்கள் அந்த போக்கை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை” என கூறியிருந்தார்.