சிம்பு இந்த இயக்குனருடன் இணைந்தால் இன்னும் டாப்ல வருவார்… பிரபல தயாரிப்பாளர் கொடுத்த டிப்ஸ்…

Published on: January 3, 2023
Pathu Thala
---Advertisement---

தமிழ் சினிமாவின் கம்பேக் நடிகராக திகழ்ந்து வரும் சிலம்பரசனின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. ஒரு கிராமத்து இளைஞனாக மிகவும் யதார்த்தமான நடிப்பை சிம்பு வெளிபடுத்தியிருக்கிறார் என பல சினிமா விமர்சகர்கள் பாராட்டினர்.

Venthu Thanindhathu Kaadu
Venthu Thanindhathu Kaadu

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவர் இதற்கு முன் “சில்லுனு ஒரு காதல்”, “நெடுஞ்சாலை”, போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். “பத்து தல” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Chitra Lakshmanan
Chitra Lakshmanan

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சிலம்பரசன் குறித்த ஒரு கருத்தை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் “சிம்பு அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப்போகிறார்?” என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

AR Murugadoss
AR Murugadoss

அதற்கு அவர் “சிம்பு அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணையப்போகிறார் என்பது குறித்த திட்டவட்டமான செய்திகள் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனருடன் அவர் இணைந்து பணியாற்றினால் நிச்சயமாக அவருடைய எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று நினைக்கிறேன். சிம்புவை பொறுத்தவரை அவர் மிகச்சிறந்த நடிகர்.

Silambarasan
Silambarasan

ஏ.ஆர்.முருகதாஸ் பல நடிகர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் மிகச் சிறந்தவர். ஆதலால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால் அது ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்ய பகவானின் திருவிளையாடலால்  நடன இயக்குனராக மாறிப்போன ஸ்ரீதர்… இப்படி எல்லாம் நடந்திருக்கா!!

Sudha Kongara
Sudha Kongara

எனினும் சிம்பு, “பத்து தல” திரைப்படத்தை அடுத்து சுதா கொங்கராவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.