“இயக்குனர் பாலாதான் முதலில் திருந்தனும்..” பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…

by Arun Prasad |   ( Updated:2023-01-16 04:04:12  )
Bala
X

Bala

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக திகழ்ந்து வரும் பாலா, “சேது”, “நந்தா”, “பிதாமகன்” “நான் கடவுள்” போன்ற வித்தியாசமான படைப்புகளின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தவர்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டும் அவரது திரைப்படங்கள், சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துபவை. கல்லையும் நடிக்க வைக்கக்கூடியவர் என்று பெயர் பெற்ற இயக்குனர் பாலா, தன்னுடன் பணிபுரியும் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் என பல செய்திகள் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன.

Bala

Bala

எனினும் பாலா கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்கிய “வர்மா” திரைப்படம் சில காரணங்களால் திரையரங்கில் வெளிவரவில்லை. அதன் பின் வேறு ஒரு இயக்குனரை வைத்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் அந்த படம் உருவாகி வெளியானது. அதன் பின் “வர்மா” ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து பாலா நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய “வணங்கான்” திரைப்படமும் டிராப் ஆனது. இவ்வாறு தொடர்ந்து பாலாவின் திரைப்படங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டே வருகிறது.

Vanangaan

Vanangaan

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் “பாலாவின் திரைப்படங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டே வருகிறது. அதற்கு என்ன காரணம்” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் “பாலாவின் எதாவது ஒரு திரைப்படத்தில் பிரச்சனை வருகிறது என்றால் அந்த திரைப்படத்தில் பங்குபெற்றவர்களால் ஏற்பட்ட தவறால் அப்படி நடக்கிறது என்று கூறலாம். பாலாவினுடைய திரைப்படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது என்றால் பாலாதான் இது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

Chitra Lakshmanan

Chitra Lakshmanan

மேலும் பேசிய அவர் “பாலாவிடம் எங்கோ ஓர் பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனையை அவர் வெளியே எடுத்துவிட்டார் என்றால் பாலா தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கமுடியும். பாலாவை பொறுத்தவரை நாம் அவரை விமர்சனம் செய்வதை விட அவர் தன்னைத்தானே விமர்சனம் செய்துகொண்டு தன்னை திருத்தினார் என்றால் மிகச் சரியாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story