More
Categories: Cinema News latest news

மார்க்கெட்டை காப்பாத்தனும்ன்னா ஜீவா இதை பண்ணியே ஆகனும்!! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய டிப்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த ஜீவா, “ஆசை ஆசையாய்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே ஓரளவு அறியப்பட்டார் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் நடித்த “தித்திக்குதே” திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

“தித்திக்குதே” திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, நடித்த “ராம்” திரைப்படம் அவரது கேரியரிலேயே ஒரு திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. “ராம்” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவாக உருவானார் ஜீவா.

Advertising
Advertising

Jiiva

அதன் பின் “டிஸ்யூம்”, “ஈ” போன்ற பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த ஜீவா, “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டினார். அத்திரைப்படத்தில் ஜீவாவின் சிறப்பான நடிப்பை புகழாத ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரத்தில் ஒன்றி போய் நடித்திருந்தார் ஜீவா.

அதன் பின் ஜீவாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த மற்றொரு திரைப்படம் “சிவா மனசுல சக்தி”. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து “கோ” திரைப்படம் அவரது கேரியரில் மறக்க முடியாத வெற்றித் திரைப்படமாக அமைந்தது. எனினும் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த “முகமூடி” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை.

Jiiva

அத்திரைப்படத்தை தொடர்ந்து ஜீவாவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக எந்த திரைப்படமும் அமையவில்லை. ஜீவாவின் மார்க்கெட் சரிந்துவிட்டதாக பல பேச்சுக்கள் அடிபட்டன. சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த “காஃபி வித் காதல்”, “வரலாறு முக்கியம்” போன்ற திரைப்படங்களும் அவரது கேரியருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், ஜீவாவின் மார்க்கெட் குறித்த ஒரு கேள்விக்கு ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

“கதாநாயகர்களை பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் அவர்களுடைய திரைப்படங்கள் வெற்றிபெறாமல் போவதும், அதன் காரணமாக அவர்களது மார்க்கெட் சரிவதும் சர்வ சாதாரணமாக நடைபெறுவதுதான். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தை நடிகர் அர்ஜூன் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார்.

இதையும் படிங்க: “படம் இன்னைக்கு ரிலீஸ்”… ஆனால் படம் இன்னும் ரெடி ஆகல.. பாரதிராஜா பண்ண வேலை என்ன தெரியுமா??

Jiiva

அந்த நேரத்தில் அர்ஜூன் ஒரு அழகான கதையை தானே இயக்கி நடித்து மீண்டும் மார்க்கெட்டை பிடித்தார். இப்போது ஜீவாவும் அதே காலகட்டத்தில்தான் இருக்கிறார் என்பது என்னுடைய கணிப்பு” என அதில் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் “ஜீவாவை பொறுத்தவரை அவருக்கு சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. ஆதலால் ஒரு நல்ல இயக்குனரையும் ஒரு நல்ல கதையையும் தேர்ந்தெடுத்து அந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார் என்றால் இழந்த மார்க்கெட்டை ஜீவா மீண்டும் பிடிப்பார்” என்று சித்ரா லட்சுமணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts