சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா?? ரசிகர்களை விளாசித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…
விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அஜித்தின் “துணிவு” திரைப்படமும் இதே நாளில் வெளியாகவுள்ளதால் அஜித்-விஜய் ரசிகர்களுக்கிடையே விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
“துணிவு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் “வாரிசு” திரைப்படத்தின் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சரத்குமார் பேசும்போது “சூர்ய வம்சம் திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது விஜய்தான் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என்று கூறினேன். தற்போது அது நடந்துவிட்டது. விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார்” என கூறினார்.
சரத்குமாரின் இந்த பேச்சு, ரஜினி ரசிகர்களை கொஞ்சம் சீண்டிவிட்டது என்று கூட சொல்லலாம். “அதெப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்” என இணையத்தில் பல ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். ஆனாலும் ஒரு பக்கம் “ரஜினியை விட தற்போது அதிக சம்பளம் வாங்குபவர் விஜய்தான், ஆதலால் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை” என இதற்கு ஆதரவும் வருகிறது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது “அயராத உழைப்பால் விஜய் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். ரஜினியை விட தற்போது விஜய் சம்பளம் அதிகமாக வாங்குகிறார் என்பதையும் விஜய்க்கு நல்ல வியாபாரம் இருக்கிறது என்பதையும் யாருமே மறுக்கவில்லை. ஆனால் இதனை வைத்து அவரை சூப்பர் ஸ்டார் என்று சிலர் சொல்கிறார்களே அதைத்தான் சிலர் மறுக்கிறார்கள்” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: அன்னைக்கு மட்டும் அந்த முடிவு எடுக்கலைன்னா?? கமல்ஹாசனின் கேரியரில் நடந்த முக்கிய சம்பவம் இதுதான்…
மேலும் அதில் “எனக்கு தெரிந்து விஜய் இது போன்ற பட்டங்களுக்கு ஆசைப்படமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் சிலர் வலிந்து அந்த பட்டத்தை விஜய்யின் மேல் திணிக்கவேண்டும் என சிலர் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.