“அஜித் இப்படி செய்வார்ன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல…” வருத்தத்தில் பிரபல தயாரிப்பாளர்… என்னவா இருக்கும்!!

Thunivu
அஜித் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டன.
அஜித்தின் “துணிவு” திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே எழுந்தன. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஸிட்டிவ்வான ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளன.

Thunivu
குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒன் மேன் ஷோவாக இத்திரைப்படத்தை அஜித் தோளில் தாங்குகிறார் எனவும் அவரின் நடிப்பு மிகவும் அசத்தலாக இருப்பதாகவும் பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 11 ஆம் தேதி சென்னை ரோஹினி திரையரங்கில் அதிகாலை 1 மணிக்கு “துணிவு” திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அத்திரையரங்கிற்கு முன்பே நின்றுக்கொண்டிருந்த ஒரு லாரியின் மேலே ஏறி நின்று பல ரசிகர்கள் கொண்டாட்டமாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.

Thunivu
அதில் பரத்குமார் என்னும் 19 வயது இளைஞர் ஒருவரும் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் லாரியில் இருந்து கீழே தவறி ரோட்டில் விழுந்துவிட்டார். கீழே விழுந்ததில் அவரது முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட, அவரை மறுத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் துர்திஷ்டவசமாக அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் இது குறித்து ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “நீ உருப்படவே மாட்ட”… வாலிக்கு சாபம் விட்ட பிரபல இசையமைப்பாளர்… ஆனால் நடந்தது என்னமோ வேற!!

Chitra Lakshmanan
“அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வெளியான நாளில் அவருடைய ரசிகர் இறந்துபோனது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. அஜித் சார்பில் அந்த இளைஞர் இறந்ததற்காக இரங்கல் தெரிவித்திருந்தால் அந்த இளைஞரின் பெற்றோருக்காவது ஒரு சின்ன மனத்திருப்தி ஏற்பட்டிருக்கும்” என கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “யாருடைய திரைப்படத்தின் வெளியிட்டிற்குச் சென்று தன்னுடைய மகன் உயிரை விட்டானோ, அவர் குறைந்த பட்சம் ஆறுதலாவது சொன்னாரே என்ற நிறைவும் அந்த பெற்றோருக்கு இருந்திருக்கும். அப்படி இருந்தும் ஏன் அஜித் அதனை செய்யவில்லை என்பது புரியவில்லை” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.