More
Read more!
Categories: Cinema News latest news

என்ன இருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜி இப்படி சொல்லியிருக்க கூடாது… பங்கமாய் கலாய்த்த தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. இவரின் கிரிக்கெட் கம்மென்ட்ரிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்கும் அதிகமாக இவரது திரைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

RJ Balaji

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்”, “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த “ரன் பேபி ரன்” என்ற திரைப்படம் கூட குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றிருந்தது.

Advertising
Advertising

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் “தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் எனது மிகச் சிறந்த நண்பர்” என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதாவது “ஆர்.ஜே.பாலாஜி உங்களை தனது நண்பர் என்கிறாரே, அதை பற்றிய உங்களது கருத்து என்ன? என்பதுதான் அந்த கேள்வி.

Chitra Lakshmanan

இந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன் “ஆர்,ஜே,பாலாஜி எந்த நிகழ்ச்சியில் அப்படி குறிப்பிட்டிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் ஆர்.ஜே.பாலாஜியும் நானும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை உங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறிய அவர் “நான் பாலாஜியை அழைத்துப்பேசி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது, அவர் என்னிடம் பேசி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. ஆனாலும் நாங்கள் நண்பர்கள்” என்று கிண்டல் அடிப்பது போல் நகைச்சுவையாக கூறியிருந்தார் சித்ரா லட்சுமணன். ஆர்.ஜே.பாலாஜி தன்னிடம் பேசியே பல நாட்கள் ஆகிறது என்பதை மிகவும் நகைச்சுவை தொனியோடு சித்ரா லட்சுமணன் கூறியது பார்வையாளர்கள் ரசிக்க வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஓடிக்கொண்டிருந்த கமல் படத்தை நிறுத்தச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!!

Published by
Arun Prasad

Recent Posts