“என் படத்தை சுந்தர்.சி படத்தோடலாம் கம்பேர் பண்றீங்களா??”… தயாரிப்பாளரிடம் கொதித்தெழுந்த மிஷ்கின்…

by Arun Prasad |
Sundar.C and Mysskin
X

Sundar.C and Mysskin

கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முகமூடி”. இத்திரைப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

Mugamoodi

Mugamoodi

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக இத்திரைப்படம் அறியப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களிடையே சரியான வரவேற்பு இல்லை. ஆதலால் மிஷ்கினின் சினிமா கேரியரில் ஒரு தோல்விப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் “முகமூடி” திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

UTV Dhananjayan

UTV Dhananjayan

“முகமூடி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்தவுடன் ஜீவா என்னை அழைத்து இத்திரைப்படம் வெற்றி அடையும் என்பதில் உடன்பாடே இல்லை என கூறினார். படப்பிடிப்பு முடிந்தபிறகு பல காட்சிகளை திருத்தம் செய்யலாம் என மிஷ்கினிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை நீலாம்பரியாக மாற்றிய ரஜினிகாந்த்… இயக்குனரே போட்டு உடைத்த சீக்ரெட்…

Mysskin

Mysskin

நாம் எதிர்பார்த்த அளவுக்கு இத்திரைப்படம் வரவில்லை, மேலும் பட்ஜெட் போட்டு கிளைமேக்ஸை மாற்றலாம் என்பதை மிஷ்கினிடம் கூறினேன். அதற்கும் அவர் முடியாது என கூறிவிட்டார். நான் 18 கோடி பணம் செலவு செய்திருக்கிறேன். ஆனால் அவர் எதையும் மாற்றமுடியாது என கூறிவிட்டார்.

Mugamoodi

Mugamoodi

ஒரு கட்டத்தில் எனக்கும் மிஷ்கினுக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என கூறினார். ஆனால் நான் தயாரித்த கலகலப்பு திரைப்படம் செய்த வசூலை கூட இத்திரைப்படம் செய்யாது என கூறினேன். அதற்கு மிஷ்கின் கலகலப்பு கூடலாம் முகமூடி படத்தை கம்பேர் செய்றீங்களா என என்னிடம் கோபமாக கத்தினார். அப்போது நான் முகமூடி திரைப்படம் வெற்றியடைய வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறினேன். இறுதியில் நான் சொன்னதுதான் நடந்தது” என அப்பேட்டியில் தனஞ்செயன் பகிர்ந்துகொண்டார்.

Next Story