இந்த முறை விடவே கூடாது!.. நடிகர்களுக்கு ஆப்புதான்!.. தயாரிப்பாளர் சங்கம் கறார்!....

by சிவா |
இந்த முறை விடவே கூடாது!.. நடிகர்களுக்கு ஆப்புதான்!.. தயாரிப்பாளர் சங்கம் கறார்!....
X

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் (பெப்சி) ஆகிய நான்கும் முக்கியமான சங்கங்களாகும். ஆனால், எல்லாம் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களா என்றால் இல்லை. யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டர்கள்.

ஒரு சங்கம் சொல்வதை இன்னொரு சங்கம் கேட்காது. குறிப்பாக நடிகர், நடிகைகள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் பல வருடங்களாக சொல்லி வருகிறது. ஆனால், நடிகர் சங்கம் அதை கண்டு கொள்வதே இல்லை. இதனால், நடிகர்கள், நடிகைகளின் ஆட்டமும் அதிகமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: இவருக்கு சனி ஜாதகத்துல இல்ல! கூடவே இருக்கு.. இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே

தங்களுக்கு மார்க்கெட் இருக்கிறதோ இல்லையோ.. தாங்கள் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்றே பல நடிகர்களும் நினைக்கிறார்கள். விஜய் 200 கோடிக்கு போனால், தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் 50 கோடி வரை சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். சில தயாரிப்பாளர்கள் அதை கொடுக்க ஒப்புகொள்வதால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு இது சிரமாக மாறுகிறது.

அதோடு, சம்பளத்தை முழுதாக முன்பே கொடுத்துவிட சொல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள். அல்லது 50 சதவீதத்தை முன்பே வாங்கி கொள்வார்கள். டப்பிங் பேசுவதற்கு முன் மீதி சம்பளத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதே நடைமுறையாக இருக்கிறது. அதோடு, படப்பிடிப்பு தளத்தில் ஜிம் பாய்ஸ், மேக்கப் செலவுகள், படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது குடும்பத்தோடு போய் டிக்கெட் செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டுவது என அட்ராசிட்டி அதிகமாக இருக்கிறது.

actors

actors

எனவேதான், தயாரிப்பாளர் சங்கம் 11 நிபந்தனைகளை விதித்திருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு நடக்காது. நாங்கள் ஸ்டிரைக் செய்வோம் என அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி நடந்தால் எந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்த முடியாது. விஜயின் 69வது படத்தின் படப்பிடிப்பே துவங்க முடியாது. எனவே, இதுபற்றி நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அக்டோபர் மாதம் எப்படியும் ஸ்டிரைக் இருக்கும் என திரையுலகில் பலரும் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: வேட்டையனுக்கு முன்பே விடாமுயற்சி வருமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Next Story