ஷூட்டிங் நடக்காமல் தடுத்த கோலிவுட்!.. விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா?!..

by சிவா |
ஷூட்டிங் நடக்காமல் தடுத்த கோலிவுட்!.. விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா?!..
X

Shanmuga pandiyan: விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். நடிப்பில் ஆர்வம் கொண்டவர். அப்பாவின் படங்களை பார்த்து வளர்ந்தவர். அப்பாவை போலவே ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. அவரை சகாப்தம் என்கிற படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த்.

ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் 2 வருடங்கள் கழித்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் ‘தமிழன் என்று சொல்’ என்கிற படம் துவங்கப்பட்டது.

shanmuga

இந்த படத்தில் அவரின் அப்பா விஜயகாந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார். படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் மட்டுமே நடந்தது. இதுதான் விஜயகாந்த் கலந்து கொண்ட கடைசி படப்பிடிப்பு. அதன்பின் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் அப்படியே நின்று போனது.

அதன்பின், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான திரைப்படம்தான் படைத் தலைவன். யானை பாகனாக சண்முக பாண்டியன் மிரட்டும் டீசர் வீடியோவும் வெளியானது. விஜயகாந்தின் மறைவின் போது இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நான் நடித்து கொடுக்கிறேன் என ராகவா லாரன்ஸ் கூறினார். ஆனால், அவருக்கு காத்திருந்து அது நடக்காமல் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.

shanmuga

#image_title

அதன்பின், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜையும் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தேனியில் துவங்கியது.

ஆனால், ஆகஸ்டு 16ம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு நடக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. எனவே, சண்முக பாண்டியன் படத்தின் படப்பிடிப்பை நடத்தவிடாமல் தடுத்துவிட்டனர். எனவே, கூட்டமைப்பின் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த முயற்சி செய்து வருகிறது தயாரிப்பாளர் தரப்பு.

இதையும் படிங்க: மட்ட சாங்க அஜித்கிட்ட காட்டுனதும்.. தல ரியாக்‌ஷன் குறித்து வெங்கட் பிரபு

Next Story