பாத்து தம்பி.. சோழிய முடிச்சிடுவோம்!.. எச்சரித்த கோலிவுட்!.. பம்மிய யோகிபாபு!...
Yogibabu: சினிமாவுக்குள் பலரும் கஷ்டப்பட்டு போராடி, பல அவமானங்களை சந்தித்து ஒருவழியாக வாய்ப்புகள் கிடைத்து மேலே வருவார்கள். ஆனால், அப்படி வருபவர்களில் சிலர் மட்டுமே பழசையெல்லாம் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், பலரும் பழசையெல்லாம் மறந்துவிட்டு அட்ராசிட்டி செய்வார்கள். இப்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் யோகிபாபு.
விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் ஒரு துணை நடிகராக ஓரத்தில் நின்று கொண்டிருப்பார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ஒரு நாளைக்கு 50 ரூபாய். எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார். ஆனால், வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் இருந்தவரை அது நடக்கவில்லை.
யோகிபாபுவுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவிலை. அமீர் இயக்கிய யோகி படத்தில் நடித்ததால் பாபு யோகி பாபுவாக மாறினார். அதன்பின் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து சிரிக்க வைத்தார். பெரும்பாலான படங்களில் இவருக்கு ஒரு காட்சி மட்டும்தான் கிடைக்கும். ஆனாலும், நடித்தார்.
இப்போது சூரி, வடிவேலு, சந்தானம், விவேக் என யாரும் களத்தில் இல்லை. எனவே, கோலிவுட் காமெடிக்கு யோகிபாபுவை மட்டுமே நம்பியிருக்கிறது. அவரின் காமெடிகள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலை. பல படங்களில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். எனவே, ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். இந்த சம்பளத்தை வடிவேலு கூட வாங்கவில்லை.
இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ சம்பளம் இதுதான்… அட்ரா சக்கை…
யோகிபாபு கையில் நிறைய படங்கள் இருக்கிறது. அவர் நடித்து முடித்து வெளிவரவுள்ள படங்களும், நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் என்ணிக்கையும் மிகவும் அதிகம். இதனால், ஏற்கனவே நடித்து முடித்துள்ள 30 படங்களுக்கு டப்பிங் பேசாமல் இருந்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் பலமுறை அழைத்தும் யோகிபாபு போகவில்லை. எனவே, அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் யோகிபாபு போனில் அழைத்த தயாரிப்பாளர் சங்கம் ‘உடனே வந்து நீங்கள் டப்பிங் பேசவில்லையென்றால் ரெட் கார்டு போடுவோம்’ என எச்சரிக்க, கடந்த 4 நாட்களாக ஒரே டப்பிங் தியேட்டரில் அந்த எல்லா படங்களுக்கும் இரவும், பகலுமாக டப்பிங் பேசி வருகிறாராம் யோகிபாபு.