ஜோசியத்தை நம்பி சுந்தர்.சி-ஐ கைவிட்ட தயாரிப்பாளர்… எடுத்த படம் எல்லாம் ஃப்ளாப்… அடக்கொடுமையே!
சினிமாத்துறை அறிவியல், கற்பனை வளம், கடினமான உழைப்பு, பணம் போன்றவற்றின் அடிப்படையில் இயங்கினாலும் சினிமாத்துறையில் இருக்கும் பலருக்கும் ஜோசியத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு. அவ்வாறு ஒரு தயாரிப்பாளர் ஜோசியத்தை நம்பி வெற்றி இயக்குனர் சுந்தர்.சி-ஐ தவறவிட்டுள்ளார். அவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
சுந்தர்.சி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “முறைமாமன்”. இத்திரைப்படத்தை தயாரித்தவர்களில் ஒருவர் விஷ்ணுராம். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுந்தர்.சியை வைத்து தொடர்ந்து, “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற திரைப்படங்களை தயாரித்தார்.
இத்திரைப்படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. ஆனால் தயாரிப்பாளர் விஷ்ணுராமிற்கு ஜோசியத்தில் அதீத நம்பிக்கை இருந்திருக்கிறது. ஜோசியத்தில் சுந்தர்.சிக்கும் விஷ்ணுராமிற்கும் இனி பொருத்தம் இருக்காது என கூறிவிட்டார்களாம். ஆதலால் இனி சுந்தர்.சி இயக்கத்தில் திரைப்படம் தயாரிக்கக்கூடாது என முடிவெடுத்தாராம் விஷ்ணுராம். அதன் பின் அவர் சுந்தர்.சியுடன் இணையவே இல்லையாம்.
முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் பத்து படங்களாவது தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாராம். ஆனால் ஜோசிய பொருத்தம் காரணமாக சுந்தர்.சியை விட்டுவிட்டார். அதன் பின் அந்த தயாரிப்பாளர் “மூவேந்தர்” திரைப்படத்தை தயாரித்துள்ளார். அத்திரைப்படம் தோல்வியடைந்திருக்கிறது. அதன் பின் அவர் தயாரித்த பல திரைப்படங்கள் தோல்வியில்தான் முடிந்ததாம். இவ்வாறு ஜோசியத்தை நம்பி வெற்றிவாய்ப்பை கெடுத்துக்கொண்டாராம் தயாரிப்பாளர் விஷ்ணுராம்.
இதையும் படிங்க: ரஜினி பட சூட்டிங்னா இப்படித்தானா? – எனக்கும் ராதிகாவுக்கும் இது செட்டே ஆகாது! ரகசியத்தை பகிர்ந்த மனோபாலா