ஜனநாயகன் விஷயத்தில் வெள்ளைக் கொடி தூக்கும் புரடியூசர்!.. இதவிட்டா வேற வழியில்ல!…

Published on: January 28, 2026
jananayagan
---Advertisement---

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு முன்பதிவெல்லாம் தொடங்கியது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முதலில் படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொல்லி விட்டார்கள். ஆனால் அதன்பின் எந்த அப்டேட்டையும் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டு படத்தின் ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு மறுதணிக்கை செய்ய வேண்டும்.. அதற்கு இன்னும் மூன்று வார கால அவகாசம் வேண்டும் என கேட்டதால் தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்றார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ‘தணிக்கை சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு, மறுதணிக்கை என சொல்வதை ஏற்க முடியாது.. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுங்கள்’ என உத்தரவிட்டார்.. ஆனால் இதை ஏற்காமல் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டுக்கு போனது.. அந்த மேல்முறையீட்டில் தனி நீதிபதி பீடி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றது. ‘வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் போது இங்கே வரத் தேவையில்லை.. அங்கேயே விசாரிக்கலாம்’ என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.. அதன்பின் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அமர்வு ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், தனி நீதிபதியே வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். அப்போது உரிய விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்திற்கு போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. எனவே இந்த வழக்கை மீண்டும் தனிநீதிபதி பீடி ஆஷாவே விசாரிக்கவுள்ளர். ஆனால் அது எப்போது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், மேலும் காலதாமதம் ஆவதை தடுப்பதற்காக ஜனநாயகன் வழக்கு விசாரணைக்கு வரும்போது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவை தயாரிப்பாளர் எடுத்திருக்கிறாராம்.