1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “முள்ளும் மலரும்”. இத்திரைப்படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தார்.
“முள்ளும் மலரும்” படப்பிடிப்பு முடிந்த பிறகு, இத்திரைப்படத்தை பின்னணி இசை இல்லாமல் பார்த்த தயாரிப்பாளர், இந்த படம் நிச்சயமாக ஓடாது என்றே முடிவு செய்தார்.
மேலும் இத்திரைப்படத்திற்கு சரியாக விளம்பரமும் செய்யவில்லை. எனினும் இத்திரைப்படம் வெளியான பின் மெல்ல மெல்ல இத்திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமானது. அதன் பின் மாபெரும் வெற்றித் திரைப்படமாகவும், காலத்தை தாண்டி கொண்டாடப்படும் கல்ட் சினிமாவாகவும் இத்திரைப்படம் அமைந்தது.
முழுதும் படிக்காத நாவல்
“சபாஷ் தம்பி”, “பணக்காரப் பிள்ளை”, “தங்கப்பதக்கம்” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களில் மகேந்திரன் கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து உமா சந்திரன் எழுதிய “முள்ளும் மலரும்” என்ற நாவலை படமாக்க நினைத்தாராம் மகேந்திரன்.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் “முள்ளும் மலரும்” நாவலை அவர் முழுதாக அப்போது படிக்கவில்லை. அந்த நாவலில் வரும் காளி என்ற கதாப்பாத்திரத்தின் கையை புலி கடித்துவிடும். ஆதலால் அந்த கதாப்பாத்திரத்திற்கு ஒரு கை இருக்காது.
இதையும் படிங்க: “சூப்பர் கதை.. படம் ஹிட்”… ஸ்ரீதர் படத்துக்கு தப்பு கணக்கு போட்ட பஞ்சு அருணாச்சலம்… இப்படி ஆகிடுச்சே…
நாவலின் அந்த பகுதி வரை மட்டுமே அவர் அப்போது படித்தாராம். தான் அதுவரை படித்த கதாப்பாத்திரங்களை கொஞ்சம் வேறு மாதிரி உருவாக்கி ஒரு திரைக்கதையை எழுதினார் மகேந்திரன். இத்திரைப்படம் வெளிவந்த பிறகுதான் அந்த நாவலை முழுவதுமாக படித்தாராம். அப்படி உருவான திரைக்கதைதான் “முள்ளும் மலரும்”.
தயாரிப்பாளரிடம் அடம்பிடித்த மகேந்திரன்
“முள்ளும் மலரும்” திரைக்கதையை எழுதி முடித்தபோது இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரமாட்டார் என்று நினைத்தார் மகேந்திரன். மகேந்திரன் அப்போது கதாசிரியராக பணியாற்றிய பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. ஆதலால் அவரிடம் பல தயாரிப்பாளர்கள் கதை வாங்கி செல்ல வருவார்கள். அப்படி ஒரு முறை வந்தவர்தான் தயாரிப்பாளர் வேணு செட்டியார்.
வேணு செட்டியார் மகேந்திரனிடம் “எதாவது கதை இருக்கிறதா?” என கேட்க, “அண்ணன்-தங்கை கதை ஒன்று இருக்கிறது” என கூறியுள்ளார். இதனை கேட்ட வேணு செட்டியார், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அதாவது வேணு செட்டியார், மகேந்திரனிடம் என்ன கதை என்றே கேட்கவில்லை. “பாச மலர்” போன்ற ஒரு கதையாக இருக்கும் என்று நம்பி “சரி பண்ணலாம்” என கூறிவிட்டாராம்.
மேலும் “முள்ளும் மலரும்” திரைப்படத்தை தானே இயக்குவதாகவும், ரஜினி இத்திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் வேணு செட்டியாரிடம் கூறினார். “ரஜினியா? அவர் வில்லன் நடிகராச்சே. வேற யாராவது ஹீரோ பேர சொல்லு” என கூறினாராம் வேணு செட்டியார். அதற்கு மகேந்திரன் “இத்திரைப்படத்தில் ரஜினி நடித்தால்தான் நன்றாக இருக்கும். அப்படி ரஜினி நடிக்கவில்லை என்றால் இந்த படத்தை நான் எடுக்கவே மாட்டேன்” என அடம்பிடித்தாராம். மகேந்திரன் இவ்வாறு அடம்பிடிப்பதை பார்த்த வேணு செட்டியார் “சரி, வா ரஜினியிடம் சென்று பேசலாம்” என கூறினாராம்.
ரஜினிக்கு மட்டும் கதை சொன்ன மகேந்திரன்
அதன் பின் ரஜினி வீட்டிற்கு இருவரும் சென்றனர். அங்கே மகேந்திரன் “முள்ளும் மலரும் என்ற புதிய திரைப்படத்தை நான் இயக்கப்போகிறேன்” என கூறினாராம். அதற்கு ரஜினி “யார் ஹீரோ?” என கேட்டிருக்கிறார். “நீதான் ஹீரோ” என மகேந்திரன் கூற ரஜினி சந்தோஷம் அடைந்தாராம்.
இதையும் படிங்க: “வள்ளி” படத்துக்கு மியூசிக் போட்டது கார்த்திக் ராஜாவா? இளையராஜாவா? குழப்பத்தை தீர்த்து வைத்த பிரபல தயாரிப்பாளர்…
சிறிது நேரத்திள் வேணு செட்டியார், ரஜினி வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார். அதன் பிறகுதான் ரஜினிக்கு “முள்ளும் மலரும்” கதையை கூறினாராம் மகேந்திரன். இவ்வாறு தயாரிப்பாளரிடம் கதையே கூறாமல் “முள்ளும் மலரும்” படத்தை இயக்கியிருக்கிறார் மகேந்திரன்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…