1977 இல் வெளியான கோகிலா திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பாலு மகேந்திரா. பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்களில் மூன்றாம் பிறை, வீடு மாதிரியான திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.
அப்போதைய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் புது வகையான திரைப்படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் பாலு மகேந்திரா. அவரது திரைப்படங்களுக்கு என்று தனி செல்வாக்கு தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. அதேபோல காட்சி அமைப்புகளில் துவங்கி படத்தில் பல விஷயங்களை மாற்றி அமைத்தார் பாலு மகேந்திரா.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் தற்சமயம் இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் அவர்கள். பாலு மகேந்திராவுடன் தனது அனுபவம் குறித்து தயாரிப்பாளர் கஃபீர் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். நீங்கள் கேட்டவை என்கிற பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படத்தை தயாரித்தவர்தான் கஃபீர்.
அதுக்குறித்து அவர் கூறும் பொழுது. படப்பிடிப்பு தளங்களுக்கும் பாலு மகேந்திராவுடன் ஒருநாள் அவர் சென்றுள்ளார். அப்பொழுது ஒரு காட்சியை ஊட்டி பகுதியில் எடுப்பதற்கு சென்று உள்ளனர் அங்கே ஒரு 15 அடி பள்ளத்தில் கிரேனை செட் செய்து படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பாலு மகேந்திரா. எனவே அதை தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.
தயாரிப்பாளரை வேலை வாங்கிய பாலுமகேந்திரா:
அதற்கு தயாரிப்பாளர் அவ்வளவு ஆழத்தில் கிரேனை செட் செய்வது மிகவும் கடினம். மேலும் ஏதாவது பிரச்சனை ஆனாலும் அது பள்ளத்தில் போய் விழுந்து விடும் என்று கூறியுள்ளார். அதற்கு பாலுமகேந்திரா இல்லை அந்த காட்சியை அப்படி படமாக்கினால்தான் சிறப்பாக இருக்கும் என முடிவாக சொல்லிவிட்டார்.
எனவே வேறு வழியில்லாமல் ஒரு நாள் முழுக்க ஆட்களை வேலைக்கு வைத்து அந்த கிரேனை செட் செய்தனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார் கஃபீர். தயாரிப்பாளர் என்றும் பார்க்காமல் இப்படி வேலை சொல்கிறாரே என்று நினைத்துள்ளார்.
ஆனால் நீங்கள் கேட்டவை படம் வெளியானபோது அந்த காட்சிக்கு தனியான வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான் பாலு மகேந்திராவின் வேலை எப்படிப்பட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன் என கபீர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சரத்பாபுவுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கவே முடியல-பகீர் கிளப்பும் சுஹாசினி…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…