வீர தீர சூரனில் சம்பள பாக்கி!.. சியான் விக்ரமுக்கு அடிச்ச லக்கி பிரைஸ்!....

#image_title
Veera Dheera Sooran: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அருண் குமார். சியான் விக்ரமை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம்தான் வீர தீர சூரன். சாமி ஸ்கொயர் படத்தை தயாரித்த சிபு தமீன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி நடித்திருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக ராயன் படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்த துஷரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் மலையாள நடிகர்கள் சுராஜ், சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. புதுமுயற்சியாக 2ம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. பக்கா ஆக்சன் காட்சிகள் இருப்பது இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போதே ரசிகர்களுக்கு புரிந்தது.

VeeraDheeraSooran
வீர தீர சூரன் வருகிற 27ம் தேதி உலகெமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, படக்குழு தொடர்ந்து புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. விஜய் டிவி டிடியுடன் படக்குழு அடித்த லூட்டி வைரல் வீடியோவாக இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம், வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்றும் படக்குழு புரமோஷன் செய்து வருகிறது.
தற்போது படக்குழு ஆந்திரா சென்றிருக்கிறது. ஹைதராபாத்தில் விக்ரம் இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது. இந்த படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் சுமார் 6 கோடியை தயாரிப்பாளர் இன்னமும் அவருக்கு கொடுக்கவில்லையாம்.
அதேநேரம் படத்தின் டிஜிட்டல் உரிமையை விக்ரமுக்கு எழுதி கொடுத்துவிட்டாராம். எனவே, அமேசான் அல்லது நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் என்ன விலை கொடுத்து அதை வாங்குகிறதோ அது விக்ரமுக்கு கிடைக்கவுள்ளது. ஒருவேளை 10 கோடி கொடுத்து வாங்கினால் விக்ரமுக்கு 4 கோடி லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.