எல்லா பணமும் போச்சு-சிம்பு பட தயாரிப்பாளரின் குமுறல்… அப்படி என்ன நடந்தது தெரியுமா?
சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “பத்து தல”. இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிம்பு ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
“பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிம்பு, “நான் ரசிகர்களை பல முறை தலைகுனிய வைத்துள்ளேன். இனிமேல் நான் உங்களை தலைகுனியவிடமாட்டேன்” என மிகவும் எமோஷனலாக பேசினார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “உங்களது திரைப்பயணத்தை திரும்பி பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?” என்று ஒரு கேள்வியை கேட்டார்.
பணம் எல்லாமே போச்சு...
அதற்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, “எனக்கு பத்து தல படம்தான் தொடக்கமே. 16 வருடத்திற்கு முன்பு என்ன சம்பாதித்து வைத்திருந்தேனோ. ஆறு வருடத்திற்கு முன்பு எல்லாமே போய்விட்டது. அதை எல்லாம் தாண்டி இப்போது எதுவும் இல்லாமல் பத்து தல படத்தில் இருந்துதான் எனது பயணத்தை தொடங்கவுள்ளேன்.
இப்போதிலிருந்து என்ன செய்கிறோம் என்பதுதான் கணக்கு. இது வரை கிடைத்ததெல்லாம் அனுபவங்கள் மட்டும்தான். யார் நம்முடன் இருப்பார், யார் நம்முடன் இருக்கமாட்டார் இதுதான் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள். இனிமேல்தான் பொருளாதார ரீதியாக உயரவேண்டும். ஆதலால் பத்து தல படம்தான் முதல் படம்” என கூறியிருந்தார்.
கே.இ.ஞானவேல்ராஜா “சில்லுனு ஒரு காதல்”, “பருத்திவீரன்”, “சிறுத்தை”, “மெட்ராஸ்”, “கொம்பன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நவசர நாயகனுக்கு அப்படியே நேர் எதிர்… கௌதம் கார்த்திக் இப்படிபட்ட ஒரு நடிகரா!… இது தெரியாம போச்சே…