Kanguva: கங்குவால காட்டு யானையோட பலத்தை பாப்பீங்க! ஓவர் பில்டப் பண்ணாத ப்ரோ..
Kanguva: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 14ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாகக்கூடிய திரைப்படம் கங்குவா. பழமொழிகளில் வெளியாகும் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் மூலம் சூர்யா ஒரு புதுவிதமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் நிச்சயமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: Kathir: நான் அறிமுகப்படுத்திய ஹீரோ! எனக்கே துரோகம் செய்துவிட்டார்.. இயக்குனர் சொன்ன ஹீரோ கதிரா?
படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஞானவேல் ராஜா எப்போதும் போல மிகைப்படுத்தி பல விஷயங்களை கூறியிருந்தார் .அதாவது எத்தனையோ படங்களை தயாரித்து இருக்கிறேன்.
அதில் ஏகப்பட்ட டென்ஷன் இருந்தது. ஆனால் டென்ஷன் இல்லாமல் நான் தயாரித்த படம் என்றால் அது கங்குவா தான் எனக்கு கூறினார். அதற்கு காரணம் சிறுத்தை சிவா தான். அவர் எதையும் பாசிட்டிவாகவே கொண்டு செல்பவர். எந்தவித சங்கடமும் இந்த படத்தில் அவர் எனக்கு கொடுக்கவே இல்லை எனக் கூறினார்.
அது மட்டுமல்லாமல் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்திருந்தால் கம்மியான ஸ்கிரீன் தான் கிடைத்திருக்கும். இப்போது சோலோவாக இந்த படம் ரிலீஸ் ஆவதால் உலகெங்கிலும் 11 ஆயிரம் ஸ்கிரீன் கிடைத்து இருக்கிறது. அதுவே ஒரு பெரிய சாதனை என்று கூறினார்.
மேலும் காட்டு யானையோட பலத்தை வரும் நவம்பர் 14ஆம் தேதி நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஞானவேல் ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். ஓவர் பில்டப் பண்ணாதீங்க ப்ரோ. அதுவே பட தோல்விக்கு காரணமாகிவிடும் .இந்த அளவு பில்டப் தேவையே இல்லை என்றெல்லாம் பல கமெண்ட்களை கூறி வருகின்றனர்.