More
Categories: Cinema News latest news

தன்னை தேடி வருவோரின் ஜாதகத்தை பார்த்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்!.. இப்படியும் ஒருவரா?..

தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலரும் எதாவது வாய்ப்பு கிடைக்காத என்று மிகவும் போராடி வருகின்றனர். எந்த விதத்திலயாவது வாய்ப்பு வந்து விடாதா என்றும் ஏங்கி வருகின்றனர். இன்னும் சிலர் படம் தயாரித்தால் நன்றாக செட்டில் ஆகிவிடலாம் என இருக்கிற சொத்துக்களை எல்லாம் விற்று சினிமாவில் அடியெடுத்து வைக்கின்றனர்.

சினிமாவில் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக இருக்கும் நிறுவனங்கள் லைக்கா, ஏஜிஎஸ், ராஜ்கமல், அடுத்ததாக ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தான். ஸ்டூடியோ கிரீன் மூலம் ஏகப்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவர் நடிகர் சிவக்குமாரின் உறவினரும் கூட.

Advertising
Advertising

ஒரு காலத்தில் சூர்யாவுக்கு மேலாளராகவும் இருந்தார். தயாரிப்பாளராக முன்னேறியதும் சூர்யா மற்றும் கார்த்தி படங்களை பெரும்பாலும் இவர் தயாரித்து வெளியிட்டிருந்தார். ஜில்லுனு ஒரு காதல், சிங்கம், நான் மகான் அல்ல, பருத்தி வீரன், சிறுத்தை, பையா, போன்ற படங்களை ஞானவேல் ராஜா தான் தயாரித்து வெளியிட்டார்.

இவரை பற்றி தான் இப்போது இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகின்றதாம். அதாவது ஞானவேல் ராஜாவுக்கு ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உள்ளவராம். தான் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் முதலில் அந்தப் படத்தை இயக்கப் போகும்
இயக்குனர்களின் ஜாதகத்தை பார்ப்பாராம்.

கூடவே நடிக்க போகும் நடிகரின் ஜாதகத்தையும் பார்ப்பாராம். ஜாதகத்தில் எல்லா பலன்களும் கூடி நல்ல செய்தி காட்டினால் தான் அந்தப் படத்தை தயாரிக்க முன்வருவாராம். இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. இவரின் கெரியரில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிகண்ட படங்களாகவே இருந்திருக்கின்றன.

கடைசியாக வெளியான பத்து தல படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’, சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 42 ’ போன்ற படங்களை ஞானவேல் ராஜா தான் தயாரிக்கிறார். அவர்கள் ஜாதகம் எப்படி இருக்க போகிறதோ?

Published by
Rohini