விஜய் முதல்வர் என்பதை அன்றே கணித்த தயாரிப்பாளர்… பிரபலம் பகிர்ந்த தகவல்!

Published on: May 7, 2026
vijay cm
---Advertisement---

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் நேற்று காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, லவ் டுடே போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. விஜயின் திரையுலகப் பயணத்தில் இந்தப் படங்கள் எல்லாம் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.

அவருடைய அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அடிகோலின. அப்படிப்பட்ட தயாரிப்பாளர் விஜய் முதல்வர் ஆவார் என்பதை முன்னரே கணித்துள்ளார். எப்படின்னு பாருங்க…

போன வருஷம் பத்திரிகையாளர் சந்திப்பில் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இப்படி சொன்னார். விஜய் தன்னோட படங்கள்ல ஏதோ ஒரு புதிய விஷயங்களைச் சொல்றாரு. கூர்ந்து கவனிச்சிருக்கேன். இவர் மக்களுக்குச் சேவை செய்யணும். அப்படிங்கற எண்ணம் கொண்டவர் விஜய்.

அதை நான் புரிஞ்சிக்கிட்டேன். அதனால நிச்சயம் இவர் எதிர்காலத்துல அரசியலில் ஈடுபடுவார். நிச்சயம் முதல்வர் ஆவார். முதல்வர் ஆவதற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்னு சொன்ன முதல் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி என்கிறார் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன்.

ஏன்னா அவ்வளவு அறிவார்ந்த தயாரிப்பாளருக்கு இதுமாதிரி விஷயங்கள் எல்லாம் தெரியத்தான் செய்யும். அடுத்தடுத்து தொடர்ச்சியா அவருக்கு வாய்ப்பும் கொடுத்தார் விஜய். ஆர்.பி.சௌத்ரி எடுத்த எல்லா படங்களும் விஜய்க்கு சூப்பர்ஹிட்தான் என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.