More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜிக்காக தானே இசையமைத்து பாடல் இயற்றிய தயாரிப்பாளர்.. என்ன படம் தெரியுமா?

தமிழ்சினிமா உலகின் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவரது படங்கள் எல்லாமே பெரும்பாலும் பிரம்மாண்டமாகவும் வெற்றிப்படங்களாகவும் அமையும். நடிகர் திலகம் சிவாஜியை வைத்து மன்னவரு சின்னவரு என்ற படத்தைத் தயாரித்தார்.

இந்தப்படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது இவருக்கு 100வது படம். நாயகியாக சௌந்தர்யா நடித்துள்ளார். 1999ல் வெளியான இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertising
Advertising

நடிகர் திலகம் குறித்து கலைப்புலி எஸ்.தாணு என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

Kalaipuli S.Thaanu

நான் சிவாஜியை வைத்து மன்னவரு சின்னவரு என்ற படம் தயாரிப்பதற்கு முன்பே அவரது எதிரொலி, பிராப்தம், ராஜபக்தி, படிக்காத மேதை, குங்குமம், படித்தால் மட்டும் போதுமா? மரகதம், கல்யாணியின் கணவன் போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளேன்.

எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கலைப்புலி. இதனை மனதில் வைத்துக் கொண்டு நான் எப்போது சிவாஜியை சந்தித்தாலும், அவர் என்னை அன்போடு வா புலி என்று அழைப்பார். தனக்கே உரித்தான கம்பீர குரலில் அவர் அழைப்பதுடன் வைகோ எப்படி இருக்கிறார் என்று கனிவாக விசாரிப்பார். அவரது அன்பான வரவேற்பில் நான் நெகிழ்ந்து போவேன்.

எல்லாத் தயாரிப்பாளர்களைப் போலவே எனக்கும் சிவாஜியை வைத்து ஒரு படம் தயாரிக்கும் ஆசை வந்தது. எனது ஆசை ஈடேறும் வகையில் மன்னவரு சின்னவரு படம் வெளியானது.

Mannavaru chinnavaru

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் என் படத்தில் நடித்தது என்னை நெகிழ வைத்தது. இந்தப்படத்தில் சிவாஜி சாரைப் போற்றி இடம் பெற்ற மன்னவரு சின்னவரு பாடலை நானே இயற்றி இசை அமைத்தேன். எனது இசை, பாடல் இயற்றிய திறமை கண்டு சிவாஜி மனதாரப் பாராட்டினார்.

எனது மனைவி சிவாஜியின் தீவிர ரசிகை. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோது, சிவாஜி படப்பாடல்களைக் கேட்பது தான் அவருக்கு ஒரே ஆறுதல். புற்றுநோய் இருப்பது அவளுக்குத் தெரியாது.

இந்த நிலையில் சிவாஜி, கமலா அம்மையாருடன் என் மனைவியைப் பார்க்க வந்தார். அப்போது நான் முன்பே கூறியிருந்தபடி சிவாஜி மிக இயல்பாக, இந்தப்பக்கம் கோவிலுக்கு வந்தோம்.

உங்களையும் பார்க்கலாம்னு வந்தோம் என்று சொன்ன போது என் மனைவி அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். அப்போது பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கண்கள் கலங்க அவர்கள் நின்றதை என்னால் மறக்க இயலாது.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவாஜியைப் பார்க்க விரைந்தேன். நான் சென்று உள்ளே நுழைந்த போதுதான் அந்த சரித்திர நாயகனின் உயிர்மூச்சு மெதுவாக அடங்கியது. ஒரு சகாப்தம் முடிவுற்றதைக் காண நேர்ந்த போதும் அம்மாமனிதன் என் மீது வைத்திருந்த அன்பை நினைத்து நான் விக்கித்து நின்றேன்.

Padikkatha methai

தலைவர் வைகோ அவர்களது சீரிய முயற்சியால் சிவாஜி மறைந்து 41வது நாளில் அவருக்கு நினைவு தபால் தலை வெளியிடும் விழாவில் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்கா வெளியிட்டார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரும் இந்தியத்திரைவானின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கு பெற்று பாராட்டினர். அது மட்டுமின்றி சிவாஜியின் நடிப்பு வரலாற்றை வைகோ விவரித்த அழகு பார்வையாளர்களை பாராட்ட வைத்தது.

Published by
sankaran v

Recent Posts