அட்வான்ஸ் கொடுத்தாதான் நடிப்பியா?!.. ரஜினியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!...

by சிவா |   ( Updated:2023-05-07 04:48:46  )
rajini
X

தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஹீரோவின் நண்பன், வில்லன் என பல வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் ரஜினி. தனக்கென ஒரு ஸ்டைல், உடல் மொழியை உருவாக்கி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. இவர் நடித்தால் படம் ஹிட் என்கிற நிலையும் உருவானது. தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படமெடுக்க வரிசையில் காத்திருந்தார்கள்.

rajini

rajini

இதில் ஆச்சர்யம் என்னவெனில் 35 வருடங்களுக்கு முன் இருந்த அதே நிலை இப்போதும் தொடர்கிறது. இப்போதும் ரஜினி அடுத்த என்ன படத்தில் நடிக்கவுள்ளார்?.. யார் இயக்குனர்?.,,. யார் தயாரிப்பாளர்?.. என்கிற ஆர்வம் ரஜினி ஒவ்வொரு படத்தை நடித்து முடிக்கும்போதும் எல்லோரிடமும் எழுகிறது.

rajini

ஆனால், ரஜினி இந்த இடத்தை அடைவதற்கு முன் பல அவமானங்களை சந்தித்துள்ளார். தயாரிப்பாளர்கள் முதல் காபி கொடுக்கும் ஆபீஸ் பாய் வரை எல்லோரிடமும் அசிங்கப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் கடந்து ஒரு வெறியோடு நடித்துதான் ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனார்.

16 வயதினிலே படம் நடித்த பின் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் நடிக்க ரஜினி ரூ.10 ஆயிரம் கேட்க, அப்படத்தின் தயாரிப்பாளர் ரூ.6 ஆயிரம் பேச ரஜினியும் ஒத்துக்கொண்டார். ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் மட்டும் கொடுங்கள் என ரஜினி சொல்லியிருக்கிறார். ஏவிஎம் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு. ஒரு வாடகை கார் பிடித்து அங்கு சென்றுள்ளார்.

rajini

rajini

மேக்கப் போடும் அறைக்கு சென்றதும், ‘எனக்கு அட்வான்ஸ் ஆயிரம் தருவதாக தயாரிப்பாளர் சொன்னார்’ என ரஜினி சொல்ல ‘சரி மேக்கப் போடுங்கள். பின்னர் வாங்கி கொள்ளலாம்’ என அங்கிருந்தவர்கள் சொல்ல, ‘இல்லை அட்வான்ஸ் வாங்காமல் மேக்கப் போட்டுக்கொள்ள மாட்டேன்’ என ரஜினி சொல்ல, அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் ‘அட்வான்ஸ் தரலனா நீ நடிக்க மாட்டியா?’ எனக்கேட்க, ரஜினியோ ‘நீங்கள் கொடுப்பதாக சொன்னீர்கள்..அதனால்தான் கேட்டேன்’ என சொல்ல ‘நான் சொல்கிறேன். இந்த படத்தில் நீ இல்லை. கிளம்பு’ என்றாராம். அதற்கு ரஜினி ‘சரி.. என்னை காரில் அனுப்பி வையுங்கள்’ என்றாராம். அதற்கு அந்த தயாரிப்பாளர் ‘உனக்கு கால் இருக்கு இல்ல.. அதுலயே போ’ என சொல்ல அங்கிருந்து நடந்தே சென்று தனது அறைக்கு ரஜினி சென்றாராம்.

இப்படி பல அவமானங்களை தாண்டித்தான் சூப்பர்ஸ்டார் ஆனார் ரஜினி!...

Next Story