Connect with us
simbu

Cinema News

சிம்பு இன்னும் திருந்தலையா… ஒரு படம் ஹிட் ஆனதும் ஆணவம் தலைக்கு ஏறிடுச்சு – மீண்டும் RED CARD!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கலக்கினார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என அடைமொழி கொண்டு அனைவரையும் கவர்ந்த அவர் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, அச்சம் என்பது மடமையடா, செக்கச்சிவந்த வானம், ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு , பத்து தல உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி ஹீரோ என்ற இடத்தில் இருந்து வருகிறார்.

இதனையே சிம்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனருக்கும் , தயாரிப்பளருக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சிம்பு மீது பல குற்றசாட்டுகள் வைத்து அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தனர். மேலும் அப்படத்தின் கதைகளை அவ்வப்போது சிம்பு மாற்றச்சொல்லியதே படத்தின் தோல்விக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் பல மேடைகளில், நான் திருந்திவிட்டேன், இப்போ பழைய சிம்புவாக இல்லை. நான் பாக்கெட் செலவுக்கு கூட பணம் இல்லாமல் என் அம்மாவிடம் கேட்டு வாங்குறேன், எனது கஷ்டமான சமயத்தில் கூட என்னுடன் இருந்தது ரசிகர்களாகிய நீங்கள் தான் என்றெல்லாம் கலங்கி அழுது மேடையில் பேசி அனுதாபம் தேடி மீண்டும் நடிக்க வந்தார்.

இப்போ மாநாடு , பத்து தல ஹிட் ஆனதும் மீண்டும் பழைய மாதிரியே மாறி ஆட்டம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் ஷங்கர் கூறியுள்ளார். ஆம்,சிம்பு உள்ளிட்ட 5 நடிகர்களுக்கு தயாரிப்பாளர் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீசுக்கு தக்க பதில் கொடுக்கவில்லை என்றால் ரெட் கார்ட் கொடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாதிரி ஆட்களையெல்லாம் திருத்தவே முடியாது. ஒரு படம் ஹிட் ஆனால் மீண்டும் ஆணவத்தில் ஆடுவார்கள் இதனால் தயாரிப்பளார்கள் தான் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் என கூறியுள்ளார். சிம்புவின் இந்த நடவடிக்கை அவரது ரசிகர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top