8 வருடமாகக் கதை எழுதி 52 நாட்களில் எடுத்த படம் இதுதான்..! - கே.இ.ஞானவேல் ராஜா

by sankaran v |   ( Updated:2022-04-22 02:43:51  )
8 வருடமாகக் கதை எழுதி 52 நாட்களில் எடுத்த படம் இதுதான்..! - கே.இ.ஞானவேல் ராஜா
X

Mahamuni Aarya, Indhuja

தமிழ்ப்படங்களில் பெரும்பாலான நேரங்களில் ஹீரோவின் பெயர் தான் வெளியே தெரியும். ஆனால் அதற்குக் காரணம் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எல்லா விஷயங்களையும் அனுசரித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றனர்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் தமிழ்ப்படங்களைத் தயாரித்தால் படம் வெற்றி தான். டைரக்டர், ஹீரோக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதில் வல்லவர். இவர் தனது தயாரிப்பு அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

8 வருடமாகக் கதை எழுதி 52 நாள்களில் எடுத்த படம் இது. டைரக்டர் சாந்தக்குமார் என்னோட நண்பர். முதல்ல படத்தோட கதைக்கே 8 வருஷமா எடுத்துக்கிட்டாருன்னா....படத்தை எடுக்க எவ்ளோ நாளாக்குவாருன்னு கொஞ்சம் பயம் இருந்துச்சு...ஆனா 55 நாள்ல எடுத்துடலாம்னு சொன்னார்.

K.E.Gnanavel Raja

நான் 50 நாள்கள்ல எடுக்கும்படி சொன்னேன்...ஆனா 52 நாள்ல படம் முடிஞ்சது. படம் பக்காவா வந்தது. நல்லா ஹார்டு ஒர்க்க பார்க்க முடிஞ்சது. மகாமுனி படத்திற்குத் தான் இத்தனை சிறப்பம்சங்கள். கமர்சியலாகவும், ஆர்ட் விஷயத்திலும் படம் ஹிட் ஆவது ரொம்ப ரேரான விஷயம். இந்தப்படம் அப்படிப்பட்டது.

எதையுமே சீரியசா எடுத்துக்காத மனிதன் யார் என்றால் அது ஆர்யா தான். அவர்கிட்ட நாம எதுவுமே யோசிக்காம ஓபனா பேசலாம். அப்படி பேசுனா நம்ம பத்தி தப்பா நினைப்பாரோன்னு பயப்பட வேண்டியதில்லை. ரொம்ப ப்ரண்ட்லியா பழகுவாரு. ஆர்யா இந்தப்படத்தை நான் தான் பண்ணுவேன்னு அடம்பிடிச்சி பண்ணுனாரு.

மௌனகுரு படத்தில் சாந்தா சார் ரொம்ப வித்தியாசமா எடுத்திருப்பாரு. படத்தில பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் பண்ணிருப்பாரு. ஆனால், எந்த ஒரு பிரஷரும் இல்லாம அவர் படத்தை சூப்பரா எடுத்திருப்பாரு.

மப்டி படத்தில சிம்புவுக்கு பதிலாக ரஜினி சார் பண்ணுனா ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த ரோலில் அதற்கு அடுத்ததா பார்க்கணும்னா அஜீத் சார் மேட்ச் ஆவாரு. அதுக்கு அப்புறம் யாரைப் பார்க்கறதுன்னா சிம்புவுக்கு பொருத்தமாக இருந்தது.

maanadu

பயங்கர ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் சிம்புவிற்கு உண்டு. அவர் மாநாடு படத்தைப் பத்தி ரொம்ப சூப்பரான படம்னு சொல்லிருக்காரு. படத்தில கதை ரொம்ப சூப்பரா இருக்கும். சிம்புவப் பத்தி நிறைய பிரச்சனைகள் வரதுக்கு என்ன காரணம்னு கேட்டா சில நேரங்களில் டைரக்டர் மேல, சில நேரங்களில் தயாரிப்பாளர் மேல பிரச்சனை இருக்கும்.

இன்னொரு தவறு இருந்தாலும் சிம்பு மேல தான் பிரச்சனைன்னு வரும். நல்ல திரைக்கதை, நல்ல படத்தை சிம்பு செலக்ட் பண்ணினா அவர் இன்னும் அடுத்தக்கட்டத்திற்குச் செல்லலாம்.

நடிகர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேங்கறாங்கன்னு தனுஷ் கொடுத்த புகாரு பற்றி டைரக்டர் ஞானவேல் ராஜா இப்படி சொல்கிறார்.

திடீர்னு சேட்டிலைட் மார்க்கட் இறங்கிப் போயிடும். நல்ல பேரு வாங்கணும்னா உங்க கையில காசு இருக்கணும்.

நடிகர்கள் எதை வச்சி சம்பளத்தை ஏத்துறாங்கன்னா சேட்டலைட் நல்லா விக்குது...இந்தி மார்க்கட் நல்லா போது...ஓவர்சீஸ் நல்லா இருக்குன்னு அதுக்கு ஏத்த மாதிரி சம்பளத்தைக் கேட்பாங்க....எல்லாம் சரியாப் போறப்போ திடீர்னு சேட்டலைட் மார்க்கெட் டவுன்னாகுது....!

ஒரு பேமிலிய எடுத்துக்கிட்டா 50 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குற குடும்பத்தலைவர் அதை வச்சி ஒரு மாசத்துக்கு தேவையான செலவுகளை செய்வாரு. திடீர்னு ஒரு மாசத்துல அந்த 50 ஆயிரம் ரூபாய்க்கும் செலவு வந்துடும்.

dhanush

அதுல 35 ஆயிரம் ரூபாய் திடீர்னு மருத்துவச்செலவா போயிரும். அந்த நேரத்துல அவர் எப்படி பால், வீட்டுவாடகை, பிள்ளைங்க படிப்புச் செலவு இதையெல்லாம் சமாளிப்பாரு? அந்த மாதிரி தான் சினிமாவும். இதை எல்லாம் ஒண்ணா உட்கார்ந்து பேசி அதை சமாளிக்கணும். அப்படி செய்துட்டா அவர் திறமையான தயாரிப்பாளர்.

தனுஷ் விஷயத்துலப் பார்த்தீங்கன்னா...ஆர்;ட்டிஸ்ட் சின்சியரா 100 நாள் ஒரு படத்துக்கு உழைச்சிட்டு அவருக்கு பேமெண்ட் வரலன்னா ரொம்ப கஷ்டம் தான்...எங்கேயோ அது மிஸ் ஆயிருக்கு. அவருக்கு வரவேண்டியது வரணும்.

Next Story