எம்ஜிஆர் கஷ்டப்பட்டு பிடிச்ச இடத்தை நோகாமல் தட்டிச் சென்ற அஜித் - புலம்பும் தயாரிப்பாளர்
Actor Ajith: வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தில்லு இருந்தா போராடு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த ஒரு சில பேர் பங்கு கொண்டனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் வாழ்க்கையில் எப்படி பிரச்சினைகளை நேர்கோண்டு சமாளிக்க வேண்டும் என்ற வகையில் சில விஷயங்களை பேசினார். போராட வேண்டும். பிரச்சினைகளை களையவேண்டும் என்றெல்லாம் பேசினார்.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ படத்தின் மீது இருந்த வருத்தம்! ‘எதிர்நீச்சல்’ இயக்குனரிடம் புலம்பி தீர்த்த மாரிமுத்து
அப்போது நடிகர் அஜித்தை பற்றியும் எம்ஜிஆரை பற்றியும் ஒப்பிட்டு சில விஷயங்களை பேசினார். அதாவது எம்ஜிஆர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பார். அவர்களோடு மனம் விட்டு உரையாடுவார். ரசிகர்களுடன் கூடவே பழகுவார்.
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவும் செய்வார். அதனாலேயே எம்ஜிஆருக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தங்கள் அன்பை கொட்டினார்கள். ஆனால் இந்த அஜித் ரொம்ப அதிர்ஷ்டக்காரன். ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை. அவர்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுப்பதில்லை. முதல்வருக்கு பாராட்டு விழா வைத்தால் வருவதும் இல்லை. அப்படியே வந்தாலும் என்னை வற்புறுத்தி வரவழைத்தார்கள் என்று சொல்வது.
இதையும் படிங்க: 17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..
இப்படி இருக்கும் அஜித் மீது ரசிகர்கள் இந்தளவுக்கு பைத்தியமாக இருக்கிறார்கள் என்றால் அஜித் மிகவும் அதிர்ஷ்டக்காரன். ஆனால் மனசளவில் நல்ல மனிதர். பல பேருக்கு தெரியாமலேயே உதவி செய்து கொண்டு வருகிறார்.
அவருக்கு வைக்கிற ஒரே வேண்டுகோள். ரசிகர்களுடன் ஒரே ஒரு செல்ஃபி எடுக்க அனுமதியுங்கள் என்று கே.ராஜன் அந்த விழாவில் அஜித்தை பற்றி பேசினார். எப்பவுமே கே.ராஜன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களை பற்றி பொதுமேடை என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவார்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பிறகுதான் கவர்ச்சி நடிகைன்னு தெரியும்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்டே!..
ஆனால் வெளிப்படையாக பேசுவார்.அந்த வகையில் இன்று அஜித்தை பற்றி வஞ்சப் புகழ்ச்சி அணியில் பேசி வேண்டுகோளையும் வைத்து விட்டுச் சென்றார்.