Cinema News
இனிமேல் கோலிவுட் பக்கமே வரக்கூடாது! நடிகையை கடுமையாக விளாசிய கே ராஜன்
K.Rajan: சினிமா சம்பந்தப்பட்ட எந்த மேடையானாலும் முதல் ஆளாக நிற்பவர் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே.ராஜன். தயாரிப்பாளர் என்ற வகையில் படம் எடுக்கும் மற்ற தயாரிப்பாளர்கள் சார்பாக அவர்கள் வேதனையை படும் துயரத்தை அவ்வப்போது ஆதங்கமாக காட்டி வருவார்.
அதுவும் சின்ன பட்ஜெட் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா கே.ராஜன் இல்லாமல் நடந்ததாக சரித்திரமே இல்லை. எல்லா படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவரை காணலாம். அதே போல் இவரிடம் இருந்து எந்த நடிகரும் நடிகைகளும் தப்பியதே இல்லை.
இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..
பாரபட்சம் இல்லாமல் முன்னணி நடிகர், நடிகையாக இருந்தாலும் அவர்களை வசைப்பாடி தீர்த்து விடுவார். ஆனால் அதற்கு பின்னாடி ஒரு நியாயமான காரணமும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய அளவிலோ சிறிய அளவிலோ பணத்தை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை ஒரு சில நடிகர்கள், நடிகைகள் மதிப்பதே இல்லை.
தயாரிப்பாளர்கள் மட்டும் இல்லை. இயக்குனர்களையும் மதிப்பதே இல்லை. அவர்களால்தான் ஒரு சில பேர் படங்களில் அறிமுகம் ஆகிறார்கள். ஆனால் புகழ் கிடைத்த பிறகு இவர்கள் எல்லாம் அந்த நடிகர் , நடிகைகளுக்கு யாரோ என்றாகிவிடுகிறார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..
இப்படி இருக்கும் பிரபலங்களைத்தான் கே.ராஜன் திட்டி தீர்த்து விடுகிறார். சமீபத்தில் கூட அசோக் என்ற புதுமுக நடிகர் நடிக்கும் இ- மெயில் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்தப் படத்தில் வனிதா விஜயகுமாரும் நடித்திருக்கிறார்.
அவரும் விழாவிற்கு வந்திருந்தார். மேடையில் பேசிய கே.ராஜன் இமெயில் திரைப்படம் மசாலாவும் குஜாலாவும் கலந்த திரைப்படமாக இருக்கிறது. நன்றாக பெரிய அளவில் எடுத்திருக்கிறார்கள். அந்த நடிகையை நல்ல முறையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகை எங்கே? என கேட்டார்.
இதையும் படிங்க: முதல் வாய்ப்பு கொடுத்தவர்கிட்டயே இப்படியா?!.. கலைஞர் விழாவில் மட்டமாக நடந்து கொண்ட வடிவேலு…
அவர் வரவில்லை என்று சொல்ல அதற்கு கே.ராஜன் இனிமேல் அந்த நடிகை தமிழ் சினிமா பக்கமே வரக்கூடாது. உன்னை அறிமுகப்படுத்தும் போது வரவில்லைனா எப்படி? இப்படித்தான் எல்லாரும் இருக்கிறார்கள். படத்தில் நடிப்பேன். ஆனால் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? என கேட்டு கடுமையாக விமர்சித்தார் கே.ராஜன்.