தயாரிப்பாளருக்கு துரோகம் இழைத்த தனுஷ்...! அட்டூழியத்திற்கு அளவே இல்லாம போச்சு... காரசாரமா பேசிய கே.ராஜன்..
நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான கே.ராஜன் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் தனுஷை பற்றிய கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்தார். அப்போது தனுஷின் வழக்கை பற்றி கேட்டபோது “ மதுரை தம்பதிகள் வயதானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இருக்கிற தைரியம் யாருக்கும் கிடையாது. எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து கஸ்தூரி ராஜாவை பார்க்கிறேன்”
அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் சிறு வயதில் இருந்தே தெரியும். எந்த தைரியத்தில் யாரின் தூண்டுதல் பேரில் அந்த தம்பதியினர் தனுஷை அவர்களின் பிள்ளை என்று கூறுகின்றனர் என தெரியவில்லை. மேலும் தனுஷ் இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் பிரிந்து போன மனைவியை அழைத்து சேர்ந்து வாழ்வதற்கு வழிவகுக்கலாம். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்கலாம்” என கூறினார்.
மேலும் அவர் கர்ணன், அசுரன் படத்தின் மூலம் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவர் மேல் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிய 20 நாள்களே இருந்த நிலையில் ஹிந்தியில் வாய்ப்பு தேடி வர தமிழில் நடித்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு ஹிந்திக்கு ஓடி விட்டார்.
அப்போ இந்த தமிழ் படத்தை நம்பி பணம் போட்டவர் கதி? இதெல்லாம் எவ்ளோ அயோக்கியத்தனம்? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகம் இல்லையா? இவர் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லையா? இந்த மாதிரி செயல்களை எல்லாம் விட்டு விட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்க வேண்டும். மேலும் தமிழில் இன்னும் பல படங்கள் நல்ல படியாக பண்ணினால் எங்கேயோ போய்விடுவார் என்று கே.ராஜன் கூறினார்.