மாஸ்டரில் இதுதான் லோகேஷ் கனகராஜ் பண்ண தப்பு.. விக்ரம்ல அந்த தப்பை பண்ணல.. கே ராஜன் பளிச்!

by Saranya M |   ( Updated:2023-10-02 06:39:13  )
vijay k rajan
X

விக்ரம் படத்தை பார்த்தால் (விக்) ரம் அடித்த போதை போல இருக்கிறது என ஆரம்பித்த தயாரிப்பாளர் கே ராஜன். மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் பண்ண தப்பு எது என்றும், விக்ரம் படத்தில் அதை செய்யாமல் சூப்பர் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தயாரிப்பாளரான கமல்ஹாசனை சந்தோஷப்படுத்தி உள்ளார் என்றும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

நடிகர்கள் விஜய், அஜித் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவது தான் தமிழ் சினிமாவுக்கு வந்த சாபக் கேடு என சமீபத்தில் செல்லும் இடமெல்லாம் மைக்கை பிடித்து விளாசி வந்தார் கே. ராஜன்.

இப்படி பேசுவதற்கு பணம் வாங்குகிறார் என பயில்வான் ரங்கநாதன் இவர் மீது பாய, நடிகைகள் மீது அவதூறு பரப்புகிறார் பயில்வான் ரங்கநாதன் என அவர் மீது புகார் ஒன்றையும் கமிஷனர் அலுவலத்திற்கே சென்று கொடுத்து விட்டு வந்தார் ராஜன்.

இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றி குறித்து அவருடைய கருத்து என்ன? என்பதை பிரபல யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய ராஜன், கமல்ஹாசன் இப்போலாம் இல்லைங்க அப்போதில் இருந்தே மிகப்பெரிய நடிகர்.

தன்னுடைய படங்களுக்கு இதுவரை கிடைத்த வரவேற்பை விட பெரிய வரவேற்பு இது என தற்போது தன்னடகத்துடன் பேசி வருகிறார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தை போல யாராலும் நடிக்க நினைத்துக் கூட பார்க்க முடியாது என வாயார புகழ்ந்ததை பார்த்து ரசிகர்களே ஷாக் ஆகி போனார்கள்.

என்னடா கே. ராஜனா இப்படி பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் என்று, சர்ச்சைக்கு சற்றும் குறைவு வைக்காதவரை கூட்டி வந்து பேச வைத்தால் கன்டென்ட் கிடைக்காமல் போய்விடுமோ என பயந்த தொகுப்பாளர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி மற்றும் இப்போ வந்த விக்ரம் படமெல்லாம் ஹிட் அடித்துள்ளது. மாஸ்டர் மட்டும் லேசா சறுக்கிடுச்சே ஏன் என போட்டு வாங்கினார்.

மாஸ்டர் தோல்வி படமெல்லாம் கிடையாது. அது வெற்றி படம் தான். ஆனால், மிகப்பெரிய வெற்றியை அந்த படம் ருசிக்காமல் போனதற்கு காரணம் அத்தனை பெரிய கல்லூரியில் பசங்களுக்கு நடத்தை பற்றிய பாடமெடுக்கும் வாத்தியாரை மொடா குடிகாரனாக யாராவது காட்டுவார்களா? அங்கே தான் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். ஆனால், அந்த தவறை விக்ரம் படத்தில் அவர் செய்யவே இல்லை.

கமல்ஹாசனை, குடிகாரனாகவும், ரெட் லைட் ஏரியாவுக்கும் போறவராக அவரது ஏஜென்ட்டுகள் பகத் ஃபாசிலுக்கு சொல்லும் கட்டுக் கதையாக வைத்த இடத்தில் ஸ்கோர் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படம் தன்னுடைய 50 சதவீதம் படம் என லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் சொல்லும் போதே, இன்னொரு 50 சதவீதம் யாருடைய இன்ஃப்ளூயன்ஸ் இருந்திருக்கும் என தெளிவாகவே புரிகிறது. அந்த தவறை அவர் தளபதி 67 படத்தில் செய்யாமல் இருக்க வேண்டும். நடிகர் விஜய் இயக்குநருக்கான ஸ்பேஸை முழுவதுமாக கொடுத்து விட வேண்டும். அப்போது தான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல படம் வெளிவரும் என பேசியுள்ளார்.

Next Story