விஜய் யாரையும் மதிக்க மாட்டாரு!.. அவர் நடிக்கலன்னா இப்ப என்னா?!.. பொங்கிய பிரபலம்!..

விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் அவரின் சில குணங்கள் பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் யாரிடமும் பேசவே மாட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் கேரவானுக்கு போய்விடுவார். இயக்குனர் கூப்பிடும்போது கேரவானில் இருந்து இறங்கி வருவார். நடித்து முடித்ததும் மீண்டும் கேரவானுக்கு போய்விடுவார்.

மாலை 6 மணி ஆகிவிட்டால் கிளம்பி வீட்டுக்கு போய்விடுவார். இதுதான் விஜயின் குணம். இயக்குனர் மற்றும் சக நடிகர்களிடம் கூட அதிகம் பேசமாட்டார். துவக்கத்தில் இது பலருக்கும் பிடிக்கவில்லை. ஒருகட்டத்தில் விஜய் அப்படித்தான் என எல்லோரும் முடிவு செய்துவிட்டனர்.

இதையும் படிங்க: என் பேரன் கூட என்னை அப்படி பாத்துக்கல!. அஜித் பற்றி உருகும் விஸ்வாசம் பாட்டி!..

விஜயுடன் நடிக்க ஆசைப்படும் சில நடிகைகள் கூட படப்பிடிப்பில் விஜய் நடந்துகொள்வதில் கடுப்பாகி விடுவதாகவும் ஒரு செய்தி உண்டு. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான நெஞ்சினிலே படத்தில் நடிகை ரோஜா ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ரோஜா ‘விஜய் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. ஏன்டா அந்த பாடலில் ஆட ஒத்துக்கொண்டோம் என எனக்கு ஆகிவிட்டது’ என சொன்னார்.

படப்பிடிப்பில் மட்டுமில்லை. பொதுவாக எங்கும் அதிகம் பேசமாட்டார் விஜய். அவரின் மேனேஜர் மூலமாக எல்லாம் சொல்லுவார். அவருக்கு குடைச்சல் வந்தால் கூட கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பார். கேட்டால் ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும், உசுப்பேத்திறவன்கிட்ட உம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என தத்துவம் சொல்லுவார்.

கே ராஜன்

கே ராஜன்

திடீரெனெ இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக நடிக்கவிருக்கிறார். இதுதான் அவரின் கடைசிப்படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், திரையுலகில் எல்லாவற்றை பற்றியும் மிகவும் வெளிப்படையாக பேசும் தயாரிப்பாளர் கே.ராஜனிடம் ‘விஜய் சினிமாவை விட்ட போகக்கூடாது. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ ஏன் கோரிக்கை வைக்க வில்லை?’ என என செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன கே.ராஜன் ‘விஜய் யாரை மதிச்சாரு?.. இவர மத்தவங்க மதிக்க.. அவர் இயக்குனர் சங்கத்தயும், தயாரிப்பாளர் சங்கத்தையும் மதிச்சாரா?.. பெப்சி தொழிலாளர்களையும் மதிச்சது கிடையாது.. அவர் வருவாரு.. நடிப்பார் போவாரு.. அவ்ளோதான்’ என காட்டமாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: லியோ வசூலையே கோட் தொட முடியல… ஜெயிலர்கிட்டன்னா வாய்ப்பில்லை ராஜா

Related Articles
Next Story
Share it