இதில் தலையிட்டால் உன்னை கொலை செய்துவிடுவேன்.! வந்து நின்னவரு விஜயகாந்த் தான்.!

by Manikandan |
vijayakanth
X

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தைரியமான மனிதரா வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இப்போதும் அதே தைரியத்துடன் தான் இருக்கிறார். ஆனால், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வெளியுலகிற்கு வர முடியவில்லை.

vijayakanth

இதனால், அவருடன் நெருங்கி பழகிய பல திரை பிரபலங்கள் அவரை பற்றிய நினைவுகளை நெகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் தயாரிப்பாளர் கே ராஜன். அவர் விஜயகாந்த் உடனான உறவை குறித்து மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, சரத்குமார் செயலாளராக இருந்தார். அப்போது, திருட்டு விசிடி புழக்கம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் கூட புது படம் போடும் பழக்கம் இருந்து வந்தது. இதனை தடுக்க பலவாறு நடவடிக்கைகள் எடுத்தனர்.

ஒருமுறை நான் (கே ராஜன்) ஒரு தனியார் பஸ்ஸில் இருந்து டிவி, டெக் என போலீஸ் உதவியுடன் பறிமுதல் செய்துவிட்டேன். அப்போது, நான் வீடு திரும்பி வருகையில், என் வீட்டு வாசலில், இந்த மாதிரியான வேளைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் உன் உடம்பில் உன் தலை இருக்காது என மிரட்டி ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இதையும் படியுங்களேன் - இவ்வளவு விஷயத்தையும் செஞ்சது நீதானா.?! கடுப்பாகும் சிவகார்த்திகேயன்.!

இதனை பார்த்த கே ராஜன், போலீசில் புகார் செய்தார். உடனே பத்திரிக்கைகளில் செய்தியாக இந்த சம்பவம் வெளியானது. இந்த செய்தியை பார்த்த விஜயகாந்த், உடனே , நடிகர் சங்கத்தை கூட்டி தீர்மானம் போட்டாராம். அப்போது, தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

இதனை பெருமை பொங்க கே ராஜன் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். எனக்கு ஒரு பிரச்சனை என்றதும் எனக்காக ஓடிவந்தது விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் தான் என தெரிவித்தார்.

Next Story