எல்லாமே ஒரு பப்ளிசிட்டிதான்… லியோவை பங்கம் பண்ணிய ராஜன்… வாய்ப்பே இல்ல ராஜா…

Leo Movie: நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாவதற்கு முன் பல வித அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. மேலும் லியோவிற்கு அதற்கு முன் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கும் இடையே வசூல் ரீதியாக கடும் போட்டி நிலவின. ஜெயிலர் திரைப்படம் கிட்டதட்ட 700 கோடி வசூலை பெற்றது.
இதையும் வாசிங்க:லியோ கலெக்ஷன் பற்றிய கேள்விக்கு நைஸா கழண்ட லோகேஷ் கனகராஜ்!.. செகண்ட் ஹாஃப் மொக்கைன்னு ஒத்துக்கிட்டாரு!..
லியோ திரைப்படம் அதைவிட வசூலில் முன்னிலை பெறும் என பலவித கருத்துகள் உலாவின. ஆனால் லியோ திரைப்படத்தின் முதல் பாதி மட்டுமே பார்க்கும்படி இருந்ததாகவும் இரண்டாம் பாகம் சுவாரஸ்யம் குறைவாக இருந்ததாகவும் படத்தினை பார்த்தவர்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் செவன் ஸ்கிரின் ஸ்டுடியோவால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வாரத்தில் 461 கோடி வசூலை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் வசூலை பற்றி சமீபத்தில் திரைப்பட விமர்சகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க:சாமில திருநெல்வேலி!.. சியான் 62ல திருத்தணி.. அறிமுகமே வெறித்தனமா இருக்கே.. இயக்குனர் யாரு தெரியுமா?..
அதன்படி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்பதே மக்களை குறிப்பிட்ட படங்களை பார்க்க வைப்பதற்கான உக்தி என தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் இவ்வளவு வசூல் செய்துள்ளது என தெரிந்தால் மக்கள் படம் நன்றாக இருக்கிறது எனும் எண்ணத்தில் படத்தினை பார்க்க செல்வார்கள் எனவும் அதன் மூலம் இன்னமும் வசூல் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை கண்டிப்பாக முறியடிக்காது எனவும் மேலும் லியோ மொத்தமாகவே 500 கோடி வசூலை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். அவ்வப்போது பல கருத்துகளை தெரிவித்து வரும் கே.ராஜன் இவ்வாறு கூறியிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வசூல் ரீதியாக விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையாக வரும் எனவும் நிச்சயமாக ஜெயிலர் வசுலை நெருங்காது என ஆணித்தனமாக கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:விக்ரம் செய்த மேஜிக்! தூசு தட்டி வெளியே எடுத்த கௌதம் மேனன் – ரிலீஸுக்கு பின்னாடி இப்படி ஒரு ஒப்பந்தமா?